10 வயது சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 10, 2021

10 வயது சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி

ஆலந்தூர், ஆக. 10 சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிர மணியனை சந்தித்து பெற் றோர் உதவி கேட்டதால், 10 வயது சிறுவனின் சிறு நீரக பிரச்சினைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அமைச் சர் ஏற்பாடு செய்தார்.

சென்னையை அடுத்த ஆலந்தூரை சோந்த 10 வயது சிறுவன் நவீன். இவனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத் துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்ய பல லட் சம் ரூபாய் செலவாகும். ஆனால் சிறுவனின் பெற்றோரான புஷ்பராஜ்-ரேணுகாதேவி தம்பதி யினர் வறுமையில் வாடு வதால் அரசு மருத்துவ மனைக்கு சென்றனர்.

அங்கு முதல்-அமைச் சர் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை இருந்தால் சிறுவனுக்கான சிகிச் சையை இலவசமாக செய் யலாம் என்று கூறினார். ஆனால் மருத்துவக் காப் பீடு அட்டை இல்லை. தற் போது கோவிலம்பாக்கத்துக்கு வீடு மாற்றி சென்று விட் டதால் குடும்ப அட்டையும் இல்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் நேற்று (9.8.2021) காலை சென் னையில் இருந்து திருச்சி செல்வதற்காக 

சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந் தார். இதையறிந்த சிறுவ னின் பெற்றோர், சென்னை விமான நிலையத்துக்கு சென்று அமைச்சரை சந் தித்து தங்களது 10 வயது மகனின் சிறுநீரக நோய் சிகிச்சைக்கு உதவும்படி கோரிக்கை விடுத்தனர்.

அவற்றை விளக்கமாக கேட்ட அமைச்சர் மா.சுப் பிரமணியன், உடனடி யாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளுக்கு பரிந்து ரைத்து சிறுவனுக்கு உட னடியாக மருத்துவ சிகிச் சைக்கு ஏற்பாடு செய்யும் படி கூறினார். அத்துடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவ மனை தலைமை மருத்து வரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், சிறுவன் நவீனுக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் வழி வகை செய்தார்.

No comments:

Post a Comment