சென்னை, ஆக. 10- அமெரிக்காவைச் சேர்ந்த எகுவிட்டி சொல்யூ ஷன்ஸ் நிறுவனம் சென்னையில் புதிய அலுவலகத்தைத் திறந் துள்ளது. சென்னையில் உள்ள டிஎல்எஃப் சைபர் சிட்டி வளாகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்நிறுவ னத்தின்புதிய அலுவலகம் அமைந்துள்ளது. இதன் மூலம் ஆயிரம் பேருக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசம் அடைந்துள்ளது.
எகுவிட்டி நிறுவனம் இணையத் தொடர்பு வசதி மூலம் எழுத்துப் பணி மற்றும் மொழி மாற்ற சேவைப் பணிகள் (Virtual Scribing), மருத்துவ ஆவணங்களைப் படியெடுத்தல், அவற்றைப் புதிதாக உருவாக்கு தல் (Medical Transcription) மற்றும் மருத்துவக் குறியீடு எழுதும் பணி (Medical Coding Services) போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. விரி வாக்க நடவடிக்கையின் ஒரு பகு தியாக சென்னை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதாக நிறு வனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கஷ்யப் ஜோஷி தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக 200 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த எண்ணிக்கை படிப்படி யாக உயர்த்தப்பட்டு ஆயிரம் பேர் உள்ள கிளை அலுவலக மாக இது செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment