சென்னை, ஆக. 1- ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணங் களை மாற்றி அண்மை யில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஏடிஎம் பயன் பாட்டுச் செலவு அதிக ரித்து வருவதையடுத்து கட்டணங்கள் உயர்த்தப் படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ஏடிஎம் பரிவர்த்தனை களுக்கான பரிமாற்ற கட் டமைப்பில் மாற்றம் கொண்டு வர 2019இல் குழு ஒன்று அமைக்கப் பட்டது. இந்த குழு ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் முழு அளவையும் மறு ஆய்வு செய்தது. கிட்டத் தட்ட ஏழு ஆண்டுகளுக் குப் பிறகு ஏடிஎம் பரி வர்த்தனை கட்டணங் களை உயர்த்தியது.
டெபிட் மற்றும் கிரெ டிட் கார்டுகளை பயன் படுத்தி பொருட்களை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைக ளுக்கு பயன்படுத்தும் போது வங்கிகள் வழியாக பரிவர்த்தனை நிறுவனங் களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒரு பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுகிறது. இது இன்டர்சேஞ்ச் கட்டணம் என அழைக்கப்படுகிறது. இந்த கட்டணம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 15 ரூபா யில் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.அதே போல நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ.5-லிருந்து, ரூ.6-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய உயர்வு விகிதங்கள் பணம் மறு சுழற்சி இயந்திரங்களில் செய்யப்படும் பரிவர்த்த னைகளுக்கும் பொருந்தும்
அதுபோலவே பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க வசூலிக்கப்படும் கட்டண மும் உயர்த்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்களில் இருந்து மாதம்தோறும் அய்ந்து முறை பணம் எடுக்க கட்டணம் கிடையாது.
அதேபோல பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க மெட்ரோ நகரங்களில் மாதம் தோறும் மூன்று முறையும், மெட்ரோ அல்லாத நக ரங்களில் அய்ந்து முறை வரையும் கட்டணம் விதிக்கப்படுவதில்லை.
அதற்கு மேல் பணம் எடுக்க ஒவ்வொரு பரி வர்த்தனைக்கும் 20 ரூபாய் சேவை கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணத்தை 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்திக் கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
No comments:
Post a Comment