தங்க பத்திரம் வெளியீடு-1 கிராம் 4,790 ரூபாய் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

தங்க பத்திரம் வெளியீடு-1 கிராம் 4,790 ரூபாய்

 புதுடில்லி, ஆக. 9- நடப்பு நிதியாண்டுக்கான ஒன் றிய அரசின் அய்ந்தாம் கட்ட தங்க பத்திரம் வெளி யீடு இன்று (9.8.2021) துவங்குகிறது. இந்த வெளியீட்டில், தங்கத்தின் விலை 1 கிராமுக்கு 4,790 ரூபாய் என நிர்ணயிக்கப் பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தங்க பத்திர வெளியீடு, நாளை துவங்கி 13ஆம் தேதியுடன் முடிவடைகி றது. நடப்பு நிதியாண்டில் தங்க பத்திரங்களை ஆறு கட்டங்களாக, மே முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளியிட இருப்பதாக அரசால் அறிவிக்கப்பட்டு இருந் தது. ஒன்றிய அரசின் சார் பில் ரிசர்வ் வங்கி இந்த தங்க பத்திர வெளியீட்டை மேற்கொண்டு வருகிறது.

பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியை கொண்டு, பத்திரத்தின் வெளியீட்டு விலை நிர்ண யிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை நடை பெறும் பத்திர வெளியீட் டின் போது தங்கத்தின் விலை கிராமுக்கு 4,790 ரூபாய் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

கிரெடிட், டெபிட்கார்டு, வலைதளம் அல் லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடு களுக்கு, 1 கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங் கப்படும் என, ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால், ‘கிரெடிட், டெபிட்கார்டு உள்ளிட்ட மின் னணு பணப் பரிவர்த்த னையில் தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்கு வோருக்கு, 1 கிராம் 4,740 ரூபாய்க்கு கிடைக்கும்.

வங்கிகள், ‘ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்ப ரேஷன்மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில் தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப் படும்.மத்திய அரசு, தங்கம் இறக் குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில் தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது.இதில் தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங் கப்படும்.

குறைந்தபட்ச முதலீடு 1 கிராம் ஆகும். தனி நபர்கள் அதிகபட்சமாக 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். அறக்கட்ட ளைகள் போன்றவை 20 கிலோ வரை முதலீடு செய்ய முடியும். தங்க பத்திரங்களுக்கான முதிர்வு காலம் 8 ஆண்டு கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment