“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்Ó - பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்Ó - பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை,ஜூலை 17-  தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின்  நேற்று (16-7-2021) தலைமைச் செயலகத்தில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின்கீழ் 13 பய னாளிகளுக்கு நலத் திட்ட உதவி களுக்கான ஆணைகளை வழங்கிச் சிறப்பித்தார்இத்துறையின்கீழ், இதுவரையில் 3,51,486 மனுக்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 1,76,268 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  

உங்கள் தொகுதியில் முதல மைச்சர்திட்டத்தின்கீழ்   முதல மைச்சர் அவர்களால் பெறப்பட்ட மனுக்கள், உரிய துறைகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகின்றன.  அவ்வாறு தீர்வு காணப்பட்ட மனுக்களில், தெரிவு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு   முதலமைச்சர் அவர்களால் இதுவரை நான்கு முறை நலத் திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இதுவரை 3,51,486 மனுக் களுக்கான கோரிக்கைகளுக்கு நட வடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றில் 1,76,268 கோரிக்கைகள் ஏற்கப்பட் டுள்ளன.  அவற்றின் விவரம் பின் வருமாறு:-

வருவாய்த் துறையின் மூலம் தனிநபர் கோரிக்கைகளான பட்டா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியங்கள், இதர நலத் திட்ட உதவிகளைக் கோரி பெறப்பட்ட  52,434  மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் வீடு கட்ட மற்றும் அடிப் படைக் கட்டமைப்பு வசதிகள் கோரி பெறப்பட்ட 35,670 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் அடிப் படைக்  கட்டமைப்பு வசதிகள் கோரி பெறப்பட்ட 6,548 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு உணவு மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை தொடர் பான  3,909 மனுக்கள் ஏற்கப்பட் டுள்ளன. தமிழ்நாடு மின் பகிர் மானக் கழகம் தொடர்பான 1,889 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள் ளன. உள் துறையின் மூலம் 1,162 மனுக்களுக்கும், இதர துறைகள் மூலம் 74,656 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாற்றுத் திறனா ளிகள் நலத்துறையின் கீழ் பெறப் பட்ட 2,100 மனுக்களில், 986 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அவற் றில் இரண்டு மாற்றுத் திறனாளி பயனாளிகள் நேற்று (16.7.2021) முதலமைச்சர் அவர்களிடமிருந்து நேரில் நலத் திட்ட உதவியினைப் பெற்றார்கள். 

உங்கள் தொகுதியில் முதலமைச் சர் துறைதொடங்கப்பட்ட கடந்த 70 நாட்களில், இதுவரை 1.76 இலட்சம் மனுக்களின் கோரிக் கைகள் ஏற்கப்பட்டுள்ளன.    இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் முதலமைச்சரின் தனிப் பிரிவில் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்களின் ஆண்டு சராசரி எண்ணிக்கையான 1 இலட்சத்து  10 ஆயிரத்தைவிட கூடுதலாகும்.  மீத முள்ள மனுக்களுக்கும் அடுத்த 30 நாட்களில் தீர்வு காண இத்துறை முனைப்புடன் செயல்பட   முதல மைச்சர்     கேட்டுக் கொண்டார்.

  இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறை யன்பு, “உங்கள் தொகுதியில் முதல மைச்சர்" துறையின் சிறப்பு அலு வலர்  ஷில்பா பிரபாகர் சதீஷ்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment