பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க திட்டம்

 சென்னை, ஜூலை 31- பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களி டம் கருத்து கேட்க திட்ட மிட்டுள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரண மாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது கரோனா வைரசின் 2ஆவது அலை பரவல் சற்று தணிந்துள் ளது. தொற்று பரவல் குறைந்துள்ளதால், குஜராத், மத்தியப் பிர தேசம்  உள்ளிட்ட மாநி லங்களில் பள்ளி,  கல்லூ ரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், தமிழ்நாட் டிலும் பள்ளிகள் திறக்கப் படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என பரவலாக எதிர்பார்க் கப்பட்டு வந்தது.

அண்மையில் பேட்டி அளித்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,   9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி பரிசீலனை நடைப் பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களி டம் கருத்து கேட்க திட்ட மிட்டுள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளது.   ஆகஸ்ட் 15ஆம் தேதிக் குள் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் எனவும்  ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்வரின் சுதந்திர தின உரையில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment