புதிய முதலீட்டுத் திட்டம் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

புதிய முதலீட்டுத் திட்டம் அறிமுகம்

சென்னை, ஜூலை 1- வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் இதர நிதிச்சேவை திட்டங்களை வழங்கி வரும் பிரபல நவி குழுமத்தின் ஒரு அங்கமாகிய நவி மியூச்சுவல் ஃபண்ட், தற்போது புதிய முதலீட்டுத் திட்டம் ஒன்றைத் தொடங்குகிறது.

முதலீட்டாளரின் தேவை, விருப்பம் போல, நினைத்த நேரத்தில் முதலீடு செய்யும் வசதி கொண்ட இத்திட்டம் நவி நிஃப்டி 50 எனப் பெயரிடப்பட்டுள் ளது. இந்தத் திட்டத்தின் மூலம் திரட் டப்படும் தொகை, தேசிய பங்குச் சந் தையின் முன்னணி 50 பங்குகளில் முத லீடு செய்யப்படும். அவ்வகையில், இந்தத் திட்டம் இன்டெக்ஸ் ஃபண்ட் என்ற பொதுப் பெயரில் வழங்கப்படும ஒரு முத லீட்டு வாய்ப்பாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தப் புதிய திட்டத்தின் தொடக்கம் குறித்து பேசிய நவி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சவுரப் ஜெயின், “மியூச்சுவல் ஃபண்ட்களின் எல்லா முதலீட்டுத் திட்டங்களிலும் தகுதிவாய்ந்த நிதி நிபுணர்கள் நியமிக் கப்பட்டு, அவர்கள் மூலமாக முதலீட்டுத் தொகை நிர்வகிக்கப்படும். ஆனால், இன்டெக்ஸ் ஃபண்ட் திட்டங்களில் நிதி நிர்வாகிகளின் பங்களிப்பு, மற்ற முதலீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடும் போது குறைவுதான் என்பது பொதுக் கருத்து. அதனால், இன்டெக்ஸ் ஃபண்ட களின் நிர்வாகக் கட்டணம் இயல்பா கவே குறைவாக இருக்கும். இதன்மூல மான சேமிப்பு முதலீட்டாளர்களுக்குத் தான் கிடைக்கிறது. ஆனாலும், எங்க ளது நிறுவனத்தில் இதுபோன்ற திட் டங்களிலும் நிதி நிர்வாகிகளின் கவன மும், அக்கறையும், ஈடுபாடும் குறைவ தில்லை. அதே தரத்தில்தான் சேவை வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment