கல்வியில் இடைநிற்கும் மலைவாழ் மாணவர்களுக்கு புதிய திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

கல்வியில் இடைநிற்கும் மலைவாழ் மாணவர்களுக்கு புதிய திட்டம்

கரூர், ஜூலை 17 கல்வி கற்காமல் இடைநிற்கும் மலைவாழ் மாணவர்களை மீட்க, "மொபைல் சிஸ் டம்" எனப்படும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என் றார் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ்.

கரூர் மாவட்டத்தில் .பரமத்தி, புன்னம், வெள்ளியணை, சின்னமநாயக்கன்பட்டி, காந்திகி ராமம் பகுதிகளிலுள்ள ஆதிதிரா விடர் நலப்பள்ளிகள், பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகளை வியாழக்கிழமை (15.7.2021) ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: - திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைத் தொடர்ந்து, தற்போது கரூர் மாவட்டத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 12,982 மாண -மாணவிகளுக்கு ரூ.4.62 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ள து.

தாட்கோ மூலம் கடவூர், தாந் தோனியில் தலா ரூ.2.44. கோடி மதிப்பில் கல்லூரி மாணவர் விடு திகள், குப்புச்சிப்பாளையத்தில் ரூ.98.56 லட்சம் , சனப்பிரட்டி யில் ரூ.51.28 கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் பழுதடைந்த கட்ட டங்கள் சீரமைக்கப்படும். புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மலைவாழ் பகுதிகளிலுள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் அவர்களின் வசிப்பிடங் களுக்கு அரசின் சார்பில் வாகனங்களை அனுப்பி, குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்து வந்து கல்வி கற்பிக்கச் செய்யும் பணிகள் மொபைல் சிஸ்டம் முறையில் தொடங்கப்பட்டுள்ளன. யாரெல்லாம் பள்ளிக் கல் வியை இடையில் விட்டார் களோ அவர்களையும் கண்ட றிந்து, துறைசார்ந்த பணியாளர் கள் அவர்களை வாகனங்களில் அழைத்து வந்து பள்ளியில் சேர்க் கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது மலைவாழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார் அவர்.

மாவட்ட ஆட்சியர் .பிரபு சங்கர், சட்டப்பேரவை உறுப்பி னர்கள் இரா.மாணிக்கம், .சிவ காமசுந்தரி, மாவட்ட ஆதிதிரா விடர் நல அலுவலர் .சந்தியா, தாட்கோ மாவட்ட மேலாளர் பாலமுருகன், செயற்பொறியாளர் காதர்பாஷா உள்ளிட்ட அலு வலர்கள்  பங்கேற்றனர்.

 

No comments:

Post a Comment