ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: “இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான். இஸ்லாமியர்களை வெளியேற்ற நினைப்பவர்கள் உண்மையான இந்துகளே அல்ல!“ என்ற மோகன் பாகவத் அவர்களின் மாயாஜாலத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?

                - சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில்: வரும் .பி. தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் சிறுபான்மையினரிடமிருந்து வாக்குகள் விழாதா என்பதற்காக காக்கா-நரி வடைக்கதை நடக்கிறது போலும்!

பேசு நா இரண்டுடையாய் போற்றி! போற்றி!!”

- - - - -

கேள்வி: “இட ஒதுக்கீடு விவகாரம் பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் ஒன்றிய - மாநில அரசுகளுக்கே உரியதுஎன்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது வரவேற்க வேண்டிய விடயம்தானே! 

- து. சின்னப்பொன்னு, வாலாஜாபாத்.

பதில்: ஆம்; அதுதானே அரசமைப்புச் சட்ட கர்த்தாக்களின் எண்ணமும், இந்திய அரசமைப்புச் சட்டம் வற்புறுத்துவதும் ஆகும். அதைப் பறிக்க எண்ணும் முயற்சி அடிக்கடி தலை நீட்டிப் பார்க்கிறது.

- - - - -

கேள்வி: மகாராட்டிரா, கருநாடக மாநிலங்களில்  மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்ததைப்  போன்று தமிழ்நாட்டிலும் மு..ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முனைப்பு காட்டுமா?

                - சு. மோகன்ராஜ், தாம்பரம்.

பதில்: நிச்சயம் வற்புறுத்துவோம். தி.மு.. அரசு செய்யும் என்றும் நம்புகிறோம்.

- - - - -

கேள்வி: “கோவையை தலைநகரமாகக் கொண்டு கொங்கு மண்டலத்தைத் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்என்று தமிழ்நாடு பாஜக தீர்மானம் நிறைவேற்றி இருப்பது மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் செயல் ஆகாதா?

                - . கோபால், கோயமுத்தூர்

பதில்: ஜாதி, மத வாதங்கள் பெரியாரின் திராவிட மண்ணான தமிழ்நாட்டில் ஒருபோதும் காலூன்றி செயல்பட முடியாது; இந்த முயற்சிகருச்சிதைவுஏற்படும் என்பது உறுதி!

- - - - -

கேள்வி: மேகதாது அணைப் பிரச்சினையில் கருநாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுவது முறையா?                      

- சு. பெருமாள், திண்டிவனம்.

பதில்: அதுபற்றி கருநாடக அரசு கவலைப்படுவதே இல்லை. ஒன்றிய அரசு தம் பக்கம் என்ற எண்ணத்தின் விளைவோ இது, புரியவில்லை? உரிமைகளுக்கான நமது போராட்டம் எப்போதும் தொடர் போராட்டந்தானா?

- - - - -

கேள்வி: “தமிழ்நாட்டு மக்களிடம் கொங்குநாடு என்ற பிரிவினை விதைகளைத் தூவ வேண்டாம்என்று .தி.மு.. ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அவர்கள் பேட்டி அளித்திருப்பது பிஜேபி கட்சிக்கு தக்க பதிலடி என்று எடுத்துக் கொள்ளலாமா?

                - . காமராஜ், செய்யாறு.

பதில்: ஆனால் .தி.மு..வின் இரட்டைத் தலைமை இதுபற்றி தனது நிலைப்பாடு என்னவென்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லையே!

இது ஒரு விசித்திர விந்தையே!

- - - - -

கேள்வி: ‘நீட்தேர்வு ஆய்வுக் குழுவை எதிர்த்து வழக்குத் தொடுத்த பாஜக வின் மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது  - பாராட்டப்பட வேண்டிய செய்தி அல்லவா?

                - .இராஜேஸ்வரி, மேல்மருவத்தூர்.

பதில்: ஆம். தி.மு.. அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த முதல் வெற்றி இது!

- - - - -

கேள்வி: மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என்றும், அதனைக் கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார் 70 ஆண்டுகளுக்கு முன்பே கூறியதை தற்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்துவது எதைக் காட்டுகிறது?

- சீ.முனியம்மாள், வெங்கோடு.

பதில்: தந்தை பெரியார் கூறிய கருத்துக்கு உள்நோக்கம் இல்லை; ஆனால் .பி. முதல்வர் வேறு எதையோ நினைத்து, இப்படி செய்கிறார் - எந்த செயலும் உள்நோக்கத்தோடு செய்தால் அது மதிப்பிழக்கக் கூடும்!

- - - - -

கேள்வி: இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவர் சேர்க்கைக்குக் காரணம் அரசின் மீதான நம்பிக்கையா? பெருந்தொற்றால் மக்களிடம் ஏற்பட்ட பொருளாதார நலிவா?

 - திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: இரண்டும் தான்! அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை வளருகிறது, நல்ல திருப்பம்; ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடுஎன்ற பெருமை பெருகட்டும்!

- - - - -

கேள்வி: தமிழ்நாட்டில் உள்ளகேந்திரிய வித்யாலயாமற்றும் சி.பி.எஸ்.. பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாகச் சேர்ப்பதற்குக்கூட இந்திய ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பது சரியா?

                - தி. இரவிச்சந்திரன், வந்தவாசி.

பதில்: தமிழ்நாடு அரசு இதில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவும், சட்ட ஆட்சி - நடைமுறை மொழி உட்பட, இரு மொழிக் கொள்கை வழிபட்டதே. எனவே தமிழ் சொல்லிக் கொடுக்க மறுக்கும் பள்ளிகள் தமிழாசிரியர்களை நியமித்து, படிக்க விரும்புவோருக்குக் தமிழ்நாட்டில் வசதி செய்ய வேண்டும். இதற்கு அப்பாற்பட்டதை அனுமதிக்க மாட்டோம் என்று துணிந்து கூறி வற்புறுத்த வேண்டும் - நமது கொள்கைப்படியான உரிமை இது!

No comments:

Post a Comment