சென்னை,ஜூலை16- கரோனா 3ஆவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கட்டமைப்பை உருவாக்கி வரு கிறது.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி மய்யங்கள் ஏற்படுத்தப் பட்டு வருகிறது. ஏற்கனவே ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மய்யம் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள் ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் ஆக் சிஜன் உற்பத்தி மய்யங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 3ஆவது அலையை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் 3ஆவது அலை வந்தால், அதனை சமாளிக் கவும் தயராக உள்ளது. அதன்படி மருத்துவ கட்டமைப்பு மேம்படுத் தப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையை பொறுத்தவரையில் தினசரி சராசரியாக 8 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
அங்கு தினசரி 5 டன் உற்பத்தியாகும் வகையில் 2 ஆக்சிஜன் உற்பத்தி மய்யங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலமாக அங்கு ஆக்சிஜன் தேவை, மருத்துவமனை வளாகத்திலேயே பூர்த்தி செய்யப்படும். இந்த கட் டமைப்புக்கு பராமரிப்பு செலவு மற்றும் மின்சார செலவு அதி கரிக்கும். ஆனால் உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைத்து பல உயிர் களை காப்பாற்ற முடியும். மேலும் 3ஆவது அலைக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தியை பெற முடியும்.
அந்தவகையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலுள்ள 3 உற்பத்தி மய்யங்களில் 5 டன் ஆக்சிஜனும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலுள்ள 3 உற் பத்தி மய்யங்களில் 5.2 டன் ஆக்சிஜனும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலுள்ள 3 உற்பத்தி மய்யங்களில் 4.8 டன் ஆக்சிஜனும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலுள்ள உற்பத்தி மய்யத்தில் 1 டன் ஆக்சிஜனும், கிண்டி கிங் மருத்துவமனையி லுள்ள உற்பத்தி மய்யத்தில் 1 டன் ஆக்சிஜனும் நாள்தோறும் உற் பத்தி செய்யப்படும்.
No comments:
Post a Comment