உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை, ஜூலை 2 மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
திமுக ஆட்சி பொறுப் பேற்றதில் இருந்து முதல மைச்சர் மு.க. ஸ்டாலின், அக்கட்சி அமைச்சர்கள் உட்பட கட்சியினர் அனைவரும் மத்திய அரசை ஒன்றிய அரசு என் றே அழைத்து வருகின்ற னர். இதற்கு பா.ஜ., உள் ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில், இந்திய அரசி யலமைப்பு சட்டத்தில் உள்ளதுபடி ஒன்றிய அரசு என்றே கூறுவோம்‘
என அழுத்தமாக கூறினார்.
இந்நிலையில், ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க கோரி பழனி யை சேர்ந்த ராம சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி கள், முதல்வரும் மற்ற அமைச்சர்களும் இவ் வாறு தான் பேச வேண்டும் என உத்தரவிட முடியாது. எனவே, மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப் பதற்கு தடை விதிக்க முடி யாது,’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
No comments:
Post a Comment