கோவை,ஜூலை 16- கோவை மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பு மிக சிறப்பாக நடைபெற்றது. பயிற்சியில் பங்கேற்று தேர்வு எழுதிய மாணவி திவ்ய வாசுகி ரவிச்சந்திரன் 100/100 முதல் இடமும் மற்றும் வின்சென்ட் ரவிச்சந்திரன் இரண்டாம் இடமும் பெற்றனர்.
கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் திக செந்தில் நாதன் தலைமையில் மாணவி திவ்யவாசுகி ரவிச்சந்திரன், மற்றும் வின்சென்ட் ரவிச்சந்திரன் ஆகியோரை நேரில் சென்று சந்தித்து அய்யாவின் அடிச்சுவட்டில் புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் முதல் இடம் பிடித்த மாணவி கூறியதாவது
பயிற்சி வகுப்பில் திராவிடம் பெரியாரியல் பெண்ணுரிமை குறித்து ஏராளமான செய்திகளை கற்றுக் கொண்டோம் இனி திராவிடர் கழகத்தில் இணைந்துசெயல்பட தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொண்டார்.
அதேபோல இரண்டாம் இடம் பெற்ற மாணவர் வின்சென்ட் ரவிச்சந்திரன் பயிற்சி வகுப்பு குறித்து கூறியதாவது பயிற்சி வகுப்பில் பங்கேற்று வெற்றி பெற்றோம் இனி திராவிடர் கழகத்தில் இணைந்து போராட்டத்தில் பங்கேற்போம் என உறுதிபடக் கூறினார்.
நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து, மற்றும் பொள்ளாச்சி நகர தலைவர் க.வீரமலை, நகர செயலாளர் இரா.நாகராஜ் , நகர இளைஞரணி தலைவர் ஆனந்த்சாமி, நகர இளைஞரணி செயலாளர் சிவராஜ், தோழர் கார்த்திக், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
No comments:
Post a Comment