பெரியாரியல் பயிற்சி வகுப்பு குறித்து குமரி மாவட்ட மாணவரின் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

பெரியாரியல் பயிற்சி வகுப்பு குறித்து குமரி மாவட்ட மாணவரின் கருத்து

தோழர்களுக்கு வணக்கங்கள்,

ன்றைய வகுப்பின் தலைப் பாகிய ஒரு மருத்துவரின் பார் வையில் தந்தை பெரியார் - தங்களின் பெரியாருடனான அனுபவங்களையும், ஒரு மருத்துவரின் பக்கம் நின்று அவர் தாங்கிய துன்பங்களை மிகவும் தெளிவுற எடுத்துரைத்த தோழர். மருத்துவர் கவுதமன் ராமமூர்த்தி அவர்களுக்கு எனது நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மூத்திர சட்டி என பாசி சத்தை ஆதரிக்கும் பலரும் பெரியாரை கேலி செய்து கேட்டிருப்போம். ஆனால் அதற்கான மெய்யான காரணத்தை அது வெறும் மூத்திர சட்டி அல்ல இக் காலத்தும் நம்மை ஆளத் துடிக்கும் பிரிவினை எண்ணம் கொண்டு ஜாதியத்தினை தூக் கிப் பிடிக்கும் மாக்களை ஓட விரட்டிய பெரியாரின் சொற்சாட் டையை இன்னும் சில காலம் நிலை நிறுத்திய வலுவாயிருந்த கைப்பிடி - என்றும் தோழர் .வெ.ரா அவர்கள்.

அவர் கழித்த இன்னல் மிகுந்த வாழ்வியல் குறித்த இன்றைய வகுப்பு கட்டாயம் எம் போன்ற புதியவர்களின் கண்களில் நீரினை வரவழைத் திருக்கும் என்று நான் உறுதிய ளிக்கிறேன்.  ஒரு சில நிமிடத்தில் பெரியாரையே நம் கண்முன் நிறுத்தினார் மருத்துவர். அந்த மணித் துளிகள் மலைப்புடன் கூடிய இனம்புரியா நெகிழ்ச்சி என்னுள். தன் வலிபாராது தான் துன்புற்றாயினும் இச்சூத்திரக் கூட்டம் மகிழ்வுற எண்ணற்ற இன்னல்களை சகித்துக் கொண் டார் என்பதை அறிவோம். இருப்பினும் அவரின் டைரியில் குறிப்பிட்ட வைகளையும், நாக்கில் புற்று நோய், குடலிறக்கம், சிறுநீரகக் கோளாறு, இறுதிக் கால கோமா நிலை என அவர் இவ்வ ளவு வலிகளின் நடுவிலும் பெண்ணுரிமை யைப் போற்றி, அனைவருக் கும் கல்வி கேட்டு, ஆதிக்க பார்ப்பனியத்தினையும் புறக்க ணித்து, சம நிலை நிலைநாட்ட பேதம் கற்பித்த கடவுளர்களை யும் எந்நிலையிலும் மறுத்தும் உடைத்தும், தேவைப்பட் டால் பிரிவினை வேதங்களை எரித் தும்,  சூத்திர பட்டம் நீங்க ஜாதி எனும் இந்நாட்டு அடிமை சங்கி லியை அடித்து நொறுக்கும் திரா விட இனஸ்பார்ட்டகஸ் "SPARTACUS" ஆக 95 ஆண்டுகள் வாழ்ந்த தன்னலம் பாரா பொது நலக் காவலரை படமாக அல்ல, நம் வாழ்வியல் பாட நெறியாக கொண்டு பய ணிப்போம்... என்றும் ஆதிக்கம் களைவோம் ஒடுக்கப்பட்டோ ரின் பக்கம் நின்று நீதி கோரி களமாடுவோம்.

என்றும் வாழ்க நம் சமத் துவ வழிகாட்டிகளின் சிந்தை!

வளர்க முற்போக்குடன் கூடிய நம் பகுத்தறிவு எண்ணம்!

- கா. முகம்மது முஃபீஸ்,

கன்னியாகுமரி மாவட்டம்

No comments:

Post a Comment