டெல்டா வைரசுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி செயல்படுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

டெல்டா வைரசுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி செயல்படுகிறது

அமெரிக்க சுகாதார நிறுவனம் கண்டுபிடிப்பு

வாஷிங்டன், ஜூலை 1- இந்திய மருத் துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்தடன் இணைந்து அய்தராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக் சின் தடுப்பூசியை உருவாக்கியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இது அவசர கால பயன்பாட்டு அங்கீகாரம் பெற்று பயன்பாட்டில் உள்ளது.

இந்த தடுப்பூசி டெல்டா வைரஸ் மற்றும் ஆல்பா வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.அய்.எச்.) கண்டு பிடித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் வரு மாறு:-

* கோவேக்சின் தடுப்பூசி செலுத் திக்கொண்டவர்களிடம் இருந்து ரத்த சீரம் பெற்று 2 ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு பொருளை உருவாக்குகிறது. மேலும் ஆல்பா (பி.1.1.7) மற்றும் பி.1.617 (டெல்டா) வகை வைரஸ் களுக்கு எதிராக செயல்படுகிறது என கூறுகின்றன. இதில் ஆல்பா வைரஸ் இங்கிலாந்திலும், டெல்டா வைரஸ் இந்தியாவிலும் கண்டறி யப்பட்டதாகும்.

* கோவேக்சின் சார்ஸ்-கோவ்-2 வின் முடக்கப்பட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. இதை நகல் எடுக்க முடியாது. ஆனால் வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு பொருளை உருவாக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டு கிறது. இந்த தடுப்பூசி பாதுகாப்பா னது. சகித்துக்கொள்ளக்கூடியது ஆகும்.

* இந்த தடுப்பூசியின் வெளியி டப்படாத 3ஆவது கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள், இது நோய்க்கு எதிராக 78 சதவீத செயல்திறனையும், மருத்துவமனை யில் சேர்ப்பது உள்ளிட்ட கடுமை யான கரோனா வைரஸ் தொற் றுக்கு எதிராக 100 சதவீத செயல் திறனையும் கொண்டுள்ளது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment