தந்தை பெரியார் அவர்களால் நிகழ்த்தப் பட்ட மாபெரும் பண்பாட்டு புரட்சிகளுள் ஒன்றான சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம் தருவதற்காக அண்ணாவின் தலைமையிலான அரசின் சட்ட அமைச்ச ரான மாதவன் சட்டமன்றத்தில் சட்ட முன் வரைவு கொண்டு வந்த நாள் இன்று (17.7.1967)
இதற்கு முன்பும் தமிழ்நாடு சட்டமன்றத் தில் இராஜகோபாலாச்சாரியார் ஆட்சிக் காலத்திலும், காமராஜர் ஆட்சிக் காலத்திலும் அரசின் கற்பில் அல்லாமல் ரெங்கசாமி ரெட் டியார், களம்பூர் அண்ணாமலை போன்ற உறுப்பினர்களால் முயற்சிகள் செய்யப்பட்ட துண்டு அப்போது அவை எதிர்க்கப்பட்டன. என்றாலும், தந்தை பெரியார் அவர்களின் தலை மாணாக்கரான அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சியில்தான் சட்டமானது. புதிய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பல சட்டங்கள் திருத்தப்பட்டன. மாற்றம் பெற்றன. தேவைக்கேற்ப புதிய சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. இரு வெவ்வேறு மதத்தவர் திருமணம் செய்து கொள்வதற்கான வசதியைச் செய்து தரும் ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட் என்னும் சிறப்பு திருமணச் சட்டம் மட்டும் சட்டமானது. எனி னும் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர ஒன்றிய அரசும் சரி, எந்த மாநில அரசுகளும் சரி முன்வரவில்லை. அண்ணல் அம்பேத்கர் ஒன்றிய அரசியல் சட்ட அமைச் சராக இருந்த போது மேற்கொண்ட ஹிண்டு கோட்டில் முயற்சிகள் பழமை வாதிகளால் முன்பே முறியடிக்கப்பட்டுவிட்டன இந்து மதத்தில் ஊடுருவல் செய்வதா இந்து மதத்தில் நிலவும் சடங்குகளை தவிர்ப்பதா? அக்னி சாட்சி இல்லாமலா? அம்மிக்கல் மிதிக்கா மலா? என்று ஏராளமான கேள்விகள்! ஒரு திருமணம் தந்தை பெரியார் அவர்கள் தலை மையில் 1934 இல் நடந்து, அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்த பிறகு, அதாவது திருமணம் நடந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகும், 'அக்னி'யை வலம் வராமல் 'சப்தபதி எடுத்து வைக்காமல் நடைபெற்றதால் திருமணம் செல்லாது என்றும் (தெய்வயானை ஆச்சி (எ) சிதம்பரம் வழக்கில்) இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை சட்டப்படியான பிள் ளைகளாக கருத முடியாது, என்றும் இரண்டு பார்ப்பன நீதிபதிகளால் தீர்ப்பு வழங்கப் பட்டது.
என்றாலும், இதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், 1928 களிலிருந்து அதாவது சுயமரியாதைத் திருமணம் சட்ட மாக்கப் படுவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன் பிருந்தே பகுத்தறிவோடு, பார்ப்பனர் இல் லாத, மூடநம்பிக்கை சடங்குகளற்ற, பெண்ண டிமைத்தனம் ஒழிந்த, எளிமையான முறை யில் அனைவருக்கும் புரியும் மொழியில், செலவிலும் சிக்கனமாக ஏராளமான சுயமரி யாதை திருமணங்கள் திராவிடர் இயக்கக் குடும்பங்களில் நடந்தேறின.
1954இல் இந்த திருமணம் சட்டவிரோதம் என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், “சட்டம் என்ன சொல்கிறது என்பது எங்களுக்கு முக்கியம் அல்ல, எங்கள் தலைவர் பெரியார் சொல்கிறார்; அதுதான் எங்களுக்கு சட்டம்” என்று துணிவோடும் தெளிவோடும் திராவிட இயக்கத் தொண்டர்களால் நடைமுறைப்படுத் தப்பட்டது. இப்படி மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டதனால்தான் இந்திய அரசின் சார்பில் எழுப்பப்பட்ட தடையைக் கூட தமிழ்நாட்டில் நீண்டகாலமாக மக்களின் வழக்கத்தில் உள்ள பழக்கமாக இருப்பதாக கூறி சட்டம் மூலம் தடையை உடைத்தெறிய முடிந்தது.
இந்தத் திருமண முறையை வியந்து பார்த்த வட இந்தியத் தலைவர்களும் உண்டு. ஒரு முறை அண்ணா அவர்கள் டெல்லிக்குச் சென்றிருந்தபோது தன்னுடன் பேசிக் கொண்டிருந்த வடநாட்டு நண்பரிடம் நான் நாளைக்கு சென்னையில் இருக்க வேண்டும். ஒரு திருமணத்தை நடத்தி வைப்பதற்காக என்று சொன்னாராம். உடனே நீங்கள் திருமணத்தை நடத்தி வைப்பீர்களா? என்று கேட்டுவிட்டு , "ஆர் யூ எ பிராமின்? ஆர் அ புரோகித்?" என்று கேட்டாராம். உடனே அண்ணா அவர்கள் “நான் பார்ப்பான் அல்ல. புரோகிதனும் அல்ல. நான் செய்து வைக்க இருப்பது சுயமரியாதைத் திருமணம்” என்று கூறி, அதனை பற்றி விளக்கினார். அந்த நண்பர், "உங்கள் நாட்டில் உங்களை விட்டு வைத்திருக்கிறார்களா?" என்று கேட்டாராம்.
பெண்ணடிமையை ஒழித்து, ஆடம்பர மற்ற சுயமரியாதைத் திருமணங்கள், இன்று ஜாதி ஒழிப்புத் திருமணங்களாகவும் முதிர்ச்சி பெற்று, தமிழகத்தில் மட்டுமல்லாமல் அதற் கான தனி சட்டவாய்ப்புகள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பின்பற்றப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகக்கூட உத் தரப் பிரதேசத்தில் கான்பூர், அலகாபாத், வாரணாசி பகுதிகளைச் சேர்ந்த நாத்திக அமைப்பினரும் இந்த முறையில் திரு மணத்தை நடத்திட தொடங்கியுள்ளனர். சிங் கப்பூரிலும் சட்டம் ஆக்கப்பட்டும், அமெ ரிக்கா, பர்மா, ஜெர்மனி போன்ற பற்பல நாடு களிலும் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அர சிலும் இந்தச் சட்டத்தினை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று சென்ற முறை ஆட்சியில் (2006 - 2011) இருந்தபோது கலைஞர் அவர்களால் மன்மோகன் சிங் அவர்கள் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இப்படி இடைவிடாத பிரச்சாரத்தின் மூலம் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அறி வாசான் தந்தை பெரியார் அவர்களாலும் அவர் கண்ட அறிவியக்கத்தாலும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கப்பட்டு, சட்ட வடிவம் பெற்றாலும், சுயநல பார்ப்பனச் சக்திகள் மூலம் இதற்கு தடை ஏற்படுத்தும் முயற்சி களும் நடைபெற்று வருகின்றன. இப்படி போடப்பட்ட ஒரு வழக்கு 2015இல் வழக்கு போட்டவருக்கு ஓங்கி குட்டுவைத்தது சென்னை உயர்நீதி மன்றம் சட்டம் இயற்றப் பட்ட பொன்விழாவின் வெற்றியாக அந்தத் தீர்ப்பு சுயமரியாதை திருமணச் சட்டத்திற்கு வலு சேர்த்தது காலம் பெரியார் வழியில் தான் பயணிக்கும் என்பதையும் உறுதி செய்தது.
No comments:
Post a Comment