கரோனாவால் உயிரிழந்தவர் உடலுக்கு குடும்பத்தினர் மரியாதை செலுத்த கேரள அரசு ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

கரோனாவால் உயிரிழந்தவர் உடலுக்கு குடும்பத்தினர் மரியாதை செலுத்த கேரள அரசு ஏற்பாடு

திருவனந்தபுரம், ஜூலைகரோனாவால் உயிரிழந்தவர் களின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று ஒரு மணி நேரம் இறுதி மரியாதை செலுத்தலாம் என கேரளா அரசு அறிவித் துள்ளது. கரோனா காரணமாக இறந்தவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்த முடியவில்லை. இது மன உளைச்சலை அதிகரிக்கிறது. அதை நிவர்த்தி செய்ய கரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். உடலை ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கலாம் என கேரள முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment