சென்னை, ஜூலை 17- சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடியில் அமைக்கப்பட்ட அதிநவீன ஆக்சிஜன் தயாரிக் கும் மய்யம் திறக்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணி யில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனாவுக்கு பிந்தைய நல் வாழ்வு மய்யத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து செயின்ட் கோபெய்ன் நிறுவ னம் பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்து நிறுவியுள்ள ரூ.2 கோடி மதிப்பிலான அதி நவீன மருத்துவ ஆக்சிஜன் தயா ரிக்கும் இயந்திரத்தின் செயல் பாட்டை தொடங்கிவைத்தார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சுகாதாரத்துறைச் செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் ஜெயந்தி, பிரான்ஸ் தூதர் ஜெனரல் லிஸ் டால்பட் பரீ ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
நல்வாழ்வு மய்யங்கள்
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கரோனாவுக்கு பிந்தைய நல வாழ்வு மய்யம் அமைக்கப்பட் டுள்ளது. இதேபோல், தமிழ் நாடு முழுவதும் மாவட்ட தலைமை அரசு மருத்துவம னைகள் மற்றும் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை களில் நலவாழ்வு மய்யங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் நலவாழ்வு மய் யங்கள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளன.
கரோனாவில் இருந்து குணமடைந்த பின் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்த நல வாழ்வு மய்யங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகை யில் நேற்று (16.72021) திருவல் லிக்கேணி ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் நலவாழ்வு மய்யம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மய்யத்தில் அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. உடல் திறனை கண்டறிய 6 நிமிட நடைப்பயிற்சி, யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
நவீன வசதிகளுடன்...
செயின்ட் கோபெய்ன் நிறு வனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி (சிஎஸ்ஆர்) ரூ.2 கோடி செலவில் இந்த மருத்து வமனையில் அமைக்கப்பட் டுள்ள ஆக்சிஜன் ஜெனரேட் டர் மய்யம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் ஜெனரேட்டர் இங்குள்ள படுக்கைகளுக்கு ஆக்சிஜனை வழங்குவது மட்டு மில்லாமல் சிலிண்டர்களில் ஆக்சிஜனை நிரப்பி வேறு மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்ல முடியும். அந்த அளவுக்கு நவீன வசதி களை கொண்டது. மேலும், ரூ.3 கோடி செலவில் இங்கும், பெருந் துறை, காஞ்சிபுரம், திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளிலும் பல்வேறு மருத்துவ வசதிகளை செயின்ட் கோபெய்ன் நிறுவ னம் ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை இந்த மருத்துவ மனையில் 47,012 பேர் கரோ னாவுக்கு சிகிச்சைப் பெற்றுள் ளனர். கரோனாவை கண்டறி யும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மட்டும் 3 லட்சத்து 36,829, சிடி ஸ்கேன் 29,700, எக்ஸ்ரே 21,935 எடுத்து மிகப்பெரிய சாத னையை ஓமந்தூரார் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை செய்துள்ளது.
கிருமி நாசினி திரவம்
ஜியோ இந்தியா பவுண்டே ஷன் நிறுவனம் 15 லட்சம் லிட் டர் கிருமி நாசினி திரவத்தை நன்கொடையாக வழங்கியுள் ளது. ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் 70 இடங்களில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இதில் 32 இடங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொன்றும் சுமார் ரூ.2 கோடி செலவில் அமைகிறது என்றார்.
No comments:
Post a Comment