பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூலை 1- நாடு முழுவதும் தொடர்ந்து பெட் ரோல், டீசல் விலை அதிக ரித்து வருகிறது. பல பகுதிக ளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு நூறு ரூபா யைக் கடந்து விற்கப்படுகிறது.

இதனால் வாகன ஓட்டி கள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல், டீசலின் விலை உயர்வு காரணமாக வாகனங்கள் வைத்திருக்கும் பொது மக்கள், அவற்றை விட்டுவிட்டு பொதுப்போக்குவரத்துக்கு மாறி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் டில்லி மெட்ரோ ரயிலில் திடீரென கூட்டம் அதிகரித்து உள்ளது. ரயிலுக்காக பல நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக ஒன்றிய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரைத் தளத்தில், ‘பொது போக்குவரத்துக்கான நீண்ட வரிசை, கரோனா கட்டுப் பாடுகளால் மட்டும் அல்ல. உங்கள் நகரின் பெட்ரோல்-டீசல் விலையை பாருங்கள், உண்மையான காரணம் புரியும்என குறிப்பிட்டுள்ளார்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை, ஜூலை 1- சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே தரைப்பாலம் கட்டப்படுகிறது. இந்த கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த ரயில்வே தரைப்பாலத்துக்காக 2 நீர்நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பி.டி.ராம்குமார், தரைப்பால கட்டுமானப் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிர மித்து தாஜ்மகால் கட்டினாலும் அது இடிக்கப்படும் என்று எச்சரித்தனர். பின்னர், தேசிய நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே துறை போன்றவை, நீர்நிலைகளை ஆக்கிரமித்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தொடரப்படுகின்றன. வளர்ச்சித் திட்டங் கள் அவசியமானவை என்றாலும், அவை இயற்கை வளங் களை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் வகையில் இருக்ககூடாது. குறிப்பாக நீர்நிலைகளை அழிக்கக்கூடாது என்று கருத்து கூறினர்.

பின்னர், சம்பந்தப்பட்ட நிலம் எந்த வகையைச் சார்ந்தது, தரைப்பால கட்டுமானத்தை இடிக்க செலவாகும் தொகை எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களுடன் தமிழக அரசும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

காவல்துறையினர் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ளவேண்டும்:  சைலேந்திரபாபு

சென்னை, ஜூலை 1- காவல் துறையினர் மனிதாபிமானத் துடன்  நடந்து கொள்ள பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவராக  பதவிக் ஏற்றுக்கொண்ட சைலேந்திர பாபு கூறி உள்ளார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி புதன்கிழமை ஓய்வு பெற்ற நிலையில் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற் கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதையடுத்து தமிழக காவல்துறையின் 30ஆவது சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு  சென்னை மெரினாவில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;- காவல்துறையின் தலைமை பொறுப்பை வகிப் பது என்பது அரிய வாய்ப்பு. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய முதலமைச்சர் மு.. ஸ்டாலினுக்கு நன்றி. தமிழகத்தில் குற்றங்கள் நடக்கால் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பேணி காக்க முன்னுரிமை வழங்கப்படும். மக்களிடம் காவல்துறையினர் மனிதாபி மானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், காவல்துறையினருக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்று சைலேந்திரபாபு கூறினார்.

பெட்ரோல் விலை உயர்ந்தால் சைக்கிளில் போகலாமே

பா... அமைச்சர் கிண்டல்

போபால், ஜூலை 1- அண்டை நாடுகளான பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 51 ரூபாய்க்கும், இலங்கையில் 59 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், இந்தியாவிலோ 100 ரூபாயைத் தாண்டி, 109 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. டீசல் விலையும் 100 ரூபாயைத் தாண்டி விட்டது.

இந்த கட்டுக்கடங்காத விலை உயர்வை ஏற்க முடியாது என்று,இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. பெட் ரோல் - டீசல் விலையில் சுமார் 60 சதவிகிதம் அளவிற்கு உள்ள கலால் வரியைகுறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.ஆனால், மோடி அரசு அதனை கேட்பதாக இல்லை.இந்நிலையில்தான், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரதேச பாஜகஅமைச்சர் பிரதுமான் சிங் தோமர், பெட்ரோல் விலை உயர்ந்தால் என்ன, சைக்கிளில்செல்லுங் கள் என்று பேசி யுள்ளார். “காய்கறி மார்கெட் போன்ற அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிளில் செல்வது நல்லது. அது உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு சுற்றுப்புறச் சூழல் தூய்மையையும் உறுதி செய்கிறதுஎன்று அவர் மக்களின் வேதனையைக் கிண்டலடித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலைஉயர்வு  மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் ஏழை - எளிய மக்களுக்கான நலத் திட்டங்களுக்குத்தான் பயன்படுத்தப் படுகிறதுஎன்று கூறியிருக்கும் அவர், “பெட்ரோல் - டீசல் விலை முக்கியமா, அல்லதுநாட்டின் சுகாதார சேவை சிறப்பாக இருப்பது முக்கியமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.பிரதுமான் சிங் தோமரின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் தற்போது கடும் கண்டனம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment