சென்னை, ஜூலை 16 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்த வழக்குரைஞர்களின் விவரங்களை பார் கவுன்சில் சேகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில்
கரோனா பரவல் காரணமாக உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் மூடப்பட்டன. மாவட்ட
நீதிமன்றங்களில் மட்டுமே தற்போது நேரடி விசாரணை நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்றங்களில்
காணொலி வழியாகவே விசாரணை நடைபெற்று வருகிறது.
கரோனா தொற்றுக்கு
ஆளாகி வழக்குரைஞர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பல வழக்குரைஞர்கள் கரோனா தொற் றுக்கு
ஆளாகி சிகிச்சை பெற்று திரும்பி யுள்ளனர். வழக்குரைஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவும்,
கரோனா வால் உயிரிழந்த வழக்குரைஞர்கள் குடும் பங்களுக்கு நிவாரண நிதி வழங்கவும் வழக்குரைஞர்கள்
சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு
மற்றும் புதுச் சேரியில் கரோனாவால் உயிரிழந்த மற்றும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று
வீடு திரும்பிய வழக்குரைஞர்களின் விபரங்களை சேகரிக்க தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில்
உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து வழக்குரைஞர்கள் சங்கங்களுக்கும் பார் கவுன்சில்
செயலர் சி.ராஜகுமார் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து உயர்
நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் பொதுச் செயலர் என்.இளங்கோ கூறியதாவது:
கரோனா தொற்றுக்கு
ஆளாகி உயிரிழந்த மற்றும் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வழக்குரைஞர்களின் விபரங்களை
சேகரிக்க பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு உயிரிழந்த வழக் குரைஞர்கள்,
சிகிச்சை பெற்ற வழக்குரை ஞர்களின் விபரங்களை மருத்துவமனை ஆவணங்களுடன் பார் அசோசியேஷனுக்கு
விரைவில் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேகதாது அணை விவகாரம்
தொடர்பாக
4 மாநில முதல்அமைச்சர்களுடன்
ஆலோசனை
ஒன்றிய நீர்வளத்
துறை அமைச்சர் முடிவு
புதுடில்லி,ஜூலை16-
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்ட கருநாடக அரசு முயற்சித்து
வருகிறது. ஆனால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றன.
இந்நிலையில் மேகதாது
அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு
கருநாடக முதலமைச்சர் எடியூரப்பா கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் கடிதம் அனுப்பியதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்தை
கைவிடுமாறு கருநாடக அரசை கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே அணை
கட்ட அனுமதி கேட்டு கருநாடக அரசு சார்பில் ஒன்றிய நீர்வளத்துறை (ஜல்சக்தி)அமைச்சரிடம்
அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சார்பில் அனைத்து கட்சி நிர்வாகிகள்
பிரதமரை சந்திக்க டில்லி விரைகிறார்கள். மேலும் புதுச்சேரி சார்பிலும் மேகதாது அணை
திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இப்படி 3 மாநிலங்கள் மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதனால் எந்த மாநிலமும் பாதிக்காத வகையிலான தீர்வை மேகதாது அணை விவகாரத்தில் எடுக்க ஒன்றிய அரசு ஆலோசித்து வரு கிறது. எனவே காவிரியோடு தொடர்புடைய தமிழ்நாடு, கருநாடகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநில முதலமைச்சர் களுடனும் இது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க ஒன்றிய நீர்வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சர் கஜேந் திர சிங் ஷெகாவத் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 4 மாநில முதலமைச்சர்களுக்கும் விரைவில் கடிதம் அனுப்பப்பட உள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment