தலவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

தலவல்

தொழில் வளர்ச்சியில் முதலிடம்

தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெறுவதே எங்கள் இலக்கு என முதல் அமைச்சர் மு.. ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.

புதிய மின் திட்டங்கள்

ரூ.3 லட்சம் கோடி மதிப்பில் புதிய மின் திட்டங்கள் அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

கரோனா எதிர்ப்புத் திறன்

மும்பையில் 50 சதவீத குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன் உள்ளதாக மருத்துவ ஆய்வில் தகவல்.

அதிக செயல் திறன்

'ஸ்புட்னிக் வி' டெல்டா தடுப்பூசி 90சதவீதம் செயல்திறன் கொண்டது என மாஸ்கோ கேமலெயா கழகம் தகவல்.

நியமனம்

முதல்அமைச்சரின் தனிப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்.

ஒன்றிய அரசு உறுதி

தமிழ்நாட்டுக்கு வாரந்தோறும் கரோனா தடுப்பூசி வழங்க ஒன்றிய அரசு உறுதி என டி.ஆர். பாலு தகவல்

கடும் நடவடிக்கை

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

தடுப்பூசி கட்டாயம்

ரயில் பயணிகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு.

முதல் மாவட்டம்

நீலகிரி மாவட்டம் பழங்குடிகளுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என சாதனை.

முதலிடம்

கரோனா 2ஆம் அலையைக் கையாண்டதில், தமிழ்நாட்டிற்கு முதலிடம் என ஆய்வில் தகவல்.

 

No comments:

Post a Comment