முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜூலை 1 காஞ்சிபுரத்தில் அண்ணா நினை விடத்தில் மரியாதை செலுத் திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பட்ஜெட்டில் அண்ணா பெய ரில் புதிதாக நலத்திட் டங்கள் அறிவிக்கப்படும் என கூறினார்.
காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு நேற்று (30.6.2021) முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
அங்குள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், அங்கு வைக்கப் பட்டிருந்த குறிப்பேடு புத்தகத் தில், மக்களிடம் செல், மக்க ளோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று என்று அண்ணா தந்த அறி வுரைப்படி இந்த ஆட்சி பீடு நடை போடும் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கைப்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதினார்.
பின்னர், அவர் செய்தி யாளர் களிடம் கூறியதாவது:-
தி.மு.க. 6-ஆவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர், காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்தில் வாழ்த்து பெற வேண்டும் என்று நான் கருதிக் கொண்டு இருந்தேன். கரோனா தொற்றின் காரணமாக, ஊர டங்கு இருக்கின்ற இந்த சூழ் நிலையில், அதற்கான வாய்ப்பு இன்றைக்குத்தான் எனக்கு கிடைத் தது. எனவே, அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, எங் களை ஆளாக்கிய, தி.மு.க.வை உருவாக்கிய அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து, அவருடைய உருவச் சிலைக்கு மாலை அணிவித்து நான் மரியாதை செலுத்துகிறேன்.
மக்களிடம் செல், மக்க ளோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று என்ற அறிவுரையை தம்பிமார் களுக்கு அவர் எப்போதும் வழங்கிக் கொண்டு இருந்தவர். அதை நினைவுப்படுத்தி, அவர் தந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடுநடை போடும் என்று உறுதி யோடு தெரிவித்துக் கொள் கிறேன் என்று நான் அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கின்ற இந்த நேரத்தில் குறிப்பேடு புத்தகத்தில் கூட நான் எழுதியிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் அவரிடம், ஏற்கனவே, அண்ணா பல் கலைக் கழகம், அண்ணா நூற் றாண்டு நூலகம் போன்று அவருடைய பெயரில் பல நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட் டது, இந்த ஆட்சிக்காலத்திலும் அது போன்று தொடர்ச்சியாக அரசுத் திட்டங்களுக்கு அவர் பெயர் வைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விரைவில் நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை தாக்கல் செய்யப்படுகிற போது, நீங்கள் எதிர்பார்ப்பது போல அந்த செய்திகள் எல்லாம் வரும் என்றார்.
No comments:
Post a Comment