கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மெட்ரோ ரயில் நிலையங்களில் காற்று சுத்திகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 2, 2021

கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மெட்ரோ ரயில் நிலையங்களில் காற்று சுத்திகரிப்பு

சென்னை,ஜூலை 2- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டசெய்திக்குறிப்பு:

கரோனா அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே மெட்ரோ ரயில் நிலையங் களுக்குள் நுழைய அனுமதிக்கப் படுவார்கள். பயணிகளில் யாருக்காவது கரோனா அறிகுறி அல்லது அதிக உடல் வெப்பநிலை இருந்தால், அவர்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுகிறது.

ஒன்றிய பொதுப்பணித்துறை அமைச்சர்  வழிகாட்டுதலின்படி, கரோனா பரவலை தவிர்க்கும் விதத்தில் அனைத்து சுரங்கவழிப்பாதை ரயில் நிலையங்களிலும் 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் அளவில் தட்பவெப்ப சூழலும் 40 முதல் 70 சதவீத வரையிலான ஈரப்பதம் மட்டுமே பராமரிக்கப்படுகிறது. ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களின் உட்புறம் எப்போதும் சுகாதாரமான காற்றை பராமரிக்கவும் தினசரி தேவையான அளவு தூய்மையான காற்று சுழற்சி முறையில் செலுத்தப்படுகிறது. காற்று இரண்டு படிநிலைகளில் சுத்திகரிக் கப்பட்டு, உட்செலுத்தப்படுகிறது. காற்று வடிப்பான்கள், குளிர்சாதனப் பெட்டி சுருள்கள், காற்று சீர்படுத்தும் கருவிகள் மற்றும் குளிர்சாதன வலைகளும் காற்று செல்லும் பாதை களிலும் புறஊதா கதிர்கள் செலுத்தப் பட்டு, நுண்ணிய கிருமிகள் கூட அழிக் கப்பட்டு தூய்மை உறுதி செய்யப் படுகிறது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் உபயோகிக்கும் அனைத்து பகுதிகள், மின்தூக்கி பொத்தான்கள், கைப்பிடிகள், நகரும் படிக்கட்டுகள் போன்ற அனைத்து இடங்களும் அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.

இதுதவிர, மக்கள் தொடுதலின்றி பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடியுடன் தொடர்பு இல்லாத கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்பு இல்லாத பயண அட்டைகள் 20 சதவீத கட்டண தள்ளுபடியுடன் ஊக்குவிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment