ஸ்டேட் வங்கி அறிவிப்பு
புதுடில்லி, ஜூலை 1 ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் கிளை கள் மற்றும் ஏ டி எம்மில் இருந்து ஜூலை முதல் தேதி முதல் மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவைக் கட்ட ணம் விதிக்கப்பட உள்ளது.
தற்போது அனைத்து வங்கி களிலும் அந்தந்த வங்கிகளின் ஏ டி எம் அல்லது கிளைகளில் இருந்து பணம் எடுக்க எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.
வேறு வங்கிகளின் ஏ டி எம் களில் இருந்து பணம் எடுக்கும் எண்ணிக்கை மட்டும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதை விட அதிக முறை பணம் எடுப்போரிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
இந்நிலையில் ஸ்டேட் பேங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டேட் வங்கி ஏ டி எம் மற்றும் கிளைகளில் இருந்து மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 5 ஆம் பரிவர்த் தனையில் இருந்து ஒவ்வொரு முறையும் ரூ.15 மற்றும் ஜி எஸ் டி சேவைக் கட்டணமாக வசூலிக்கப் படும்.
தவிர வங்கி வாடிக்கையளர்கள் 10 பக்கங்கள் கொண்ட காசோலை புத்தகத்தைப் பெற ரூ.40 மற்றும் ஜி.எஸ்.டி. கட்டணம் செலுத்த வேண்டும்.
இதைப் போல் 25 பக்கங்கள் கொண்ட காசோலை புத்தகம் பெற ரூ.75 மற்றும் ஜிஎஸ்டி சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த காசோலை கட்டணத்தில் இருந்து மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment