திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து

ஒசூர்,ஜூலை1- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒசூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கிருட்டினகிரி மேற்கு திமுக மாவட்ட செயலாளரும், ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து பயனாடை அணிவித்து திராவிடபொழில் இதழ் வழங்கினார்கள்.

அதே போன்று மேனாள் ஒசூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக நகர பொறுப்பாளருமான எஸ்..சத்தியா,மேனாள் வேப்பனபள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் ஆகியோருக்கும் பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, அமைப்பாளர் .முனுசாமி, மாவட்ட திராவிடர் தொழிலா ளரணி தலைவர் சி.மணி,செயலாளர் தி.பாலகிருஷ்ணன், மாவட்ட ..செயலாளர் சிவந்தி அருணாசலம்,துணைச் செயலாளர் ஜெயசந்தர், மாவட்ட இளைஞரணி செயலாளர் .செ.மதிவாணன், ..மாவட்ட அமைப்பாளர் ஜெகநாதன், நகர செயலாளர் அஃப்ரிடி துணைத்தலைவர் சின்னராசு,துணை செயலாளர் பெ.கண்ணன், விடுதலை சிறுத்தை கட்சி ஊடக மய்ய மாவட்ட அமைப்பாளர் இளையராஜா, உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment