சென்னை, ஜூலை 31- 9 மாவட்டங்களில் உள் ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் நடத்தும் அலுவ லர்களை நியமிக்க வேண் டும் ஆட்சியர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத் தரவு.
தமிழ்நாட்டில் விழுப் புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபு ரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப் டம்பர் 15ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர் தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள் ளது.
இதைத்தொடர்ந்து தேர்தலை நடத்தும் பணி களை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண் டுள்ளது. இதன் ஒரு கட் டமாக வாக்காளர் பட் டியலை தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடி களை உருவாக்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட் டது. தற்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை மாநில தேர்தல் ஆணை யம் பிறப்பித்துள்ளது.
இந்த வழிகாட்டுதல் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அது தொடர்பான அறிக் கையை அளிக்கவும் 9 மாவட்ட கலெக்டர்க ளுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத் தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment