சர்வமும் தனியார் மயமே! மும்பை பன்னாட்டு விமானநிலைய நிர்வாகம் அதானி குழுமம் கைப்பற்றியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

சர்வமும் தனியார் மயமே! மும்பை பன்னாட்டு விமானநிலைய நிர்வாகம் அதானி குழுமம் கைப்பற்றியது

மும்பை , ஜூலை 17  மும் பை பன்னாட்டு விமான நிலையநிர்வாகம் அதானி குழுத்தின் கையில் சென்று விட்டது ஏற்கெனவே நிர்வகித்து வந்த  ஜிவிகே குழுமத்திடம் இருந்து அதானி குழுமம் நிர்வாக பொறுப்பை கைப்பற்றி உள்ளது.

ஒன்றிய  பா.. அரசு பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயமாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக விமான நிலை யங்களைத் தனியார்மய மாக்கும் நடவடிக்கை யில்  தீவிரமாக இறங்கியுள்ளது. அரசு  தனியார் கூட்டு முயற்சி என்ற அடிப் படையில், இந்த விமான நிலையங்களைத் தனியா ரிடம்  ஒன்றிய அரசு குத்ததைக்கு விடுகிறது.

முதற்கட்டமாக  லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய விமான நிலையங் களை  நிர்வகிக்கும் உரி மையை ஏலம் வழியாக அதானி நிறுவனம் பெற் றது. இந்த நிலையில், தற்போது மும்பை பன் னாட்டு விமான நிலைய மும் அதானி கைக்கு சென்றுள்ளது. இதற்கு மத்திய அரசு, மகாராட் டிரா மாநில அரசு மற்றும் நகர் மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் ஆகி யவை ஒப்புதல் கொடுத் துள்ளன.

இதைத்தொடர்ந்து இதுவரை மும்பை விமான நிலையத்தை பராமரித்து வந்த, ஜிவிகே குழுமத்திடம் இருந்து அதானி குழும் கைப்பறியுள்ளது. இதை  மும்பை விமான நிலைய நிர்வாகக் குழு அதிகாரப் பூர்வமாக வெளியிட் டுள்ளது.

இதன் காரணமாக, 'அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ்' தற்போது இந்திய விமான நிலையங் களின் நிர்வகிப்பில் 25 சதவீத பங்களிப்பைத் தன் வசம் கொண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய நிர்வகிப்பு நிறுவனமாக அதானி குழுமம் விளங்குகிறது/

நாடு முழுவதும் இது வரை மொத்தம் 8 விமான நிலையங்களின் நிர்வாக உரிமையை கொண்டுள்ள அதானி நிறுவனம், விமான சரக் குப் போக்கு வரத்திலும் 33 சதவீத பங்களிப்பை கொண் டுள்ளது.  இதன் மூலம், நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய உட்கட்ட மைப்பு நிறுவனமாக அதானி குழுமம் உரு வெடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியா ளர்களிடம் பேசிய, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ,  உலகத்தரம் மிக்க மும்பை விமான நிலையத்தின் நிர்வாக உரிமையைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வர்த்தக ரீதி யாகவும், பயணிகள் வரு கையிலும் இரண்டாவது பெரிய விமான நிலையம் இது. அதானி நிறுவனத் தின் விரிவாக்க உத்திகள் மூலம் உலகத்தரத்தில் விமான நிலையங்களை மேம்படுத்தி டயர் 1 நகரங் களை டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களுடன் இணைப் பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் நகரம், கிரா மம் என்கிற வேறுபாடு குறைக்கப்படும் என எதிர் பார்க்கிறேன்.  நவி மும்பை பன்னாட்டு விமான நிலைய கட்டுமான செயல் பாடுகள் அடுத்த மாதத் திற்குள் தொடங்கப்படும். 2024இல் மக்கள் பயன் பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment