புதுச்சேரி, ஜூலை 16 புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட் டுள்ளது என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அண்மையில், 9, 10, 11,12ஆம் வகுப்புகள் நடத்த, 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பால் அதற்கான நடைமுறைகளைக் கல்வித்துறை மூலம் கலந்து ஆலோசித்து வெளியிடுவோம் என்று அமைச்சர் நமச்சிவாயமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுக்கான வகுப்பறையைத் தயார் செய்தும் வருகின்றனர்.
அதேபோல் கல்லூரிகளிலும் பணிகள் நடக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், வழிகாட்டு நெறி முறைகளைக் கல்வித்துறை ஏதும் பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் தமிழிசையை அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்தார்.
இதையடுத்துக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், பள்ளி _ -கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். நோய்த் தொற்று முழுமையாகக் குறையவில்லை. பள்ளிகள் திறப்பை மறுபரீசிலனை செய்யக் கோரிக்கை வந்தது. முதல்வர், ஆளுநர் உடன் பேசிய பிறகு தள்ளிவைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. எந்தத் தேதி என பிறகு அறிவிக்கப்படும். இப்போதைக்கு பள்ளி- கல்லூரி திறப்பு இல்லை. தேதியோ, மாதமோ குறிப்பிட இயலாது என்று தெரிவித்தார். கல்லூரிகள் அனைத்தும் இணைய வழியே தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தரிடமும் அரசு அறிவுறுத்தியுள்ளது என்று கூறினார்.
ஓய்வூதியம் பெறுவோர் விவரங்களை வாட்ஸ்அப் மூலமும் பெறலாம்
புதுடில்லி, ஜூலை 16 ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஓய்வூதிய விவரங்களை வாட்ஸ்அப் செயலி மூலமும் பெறலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ஓய்வூதியம் பெறுவோருக்கு அவர்களது ஓய்வூதிய தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக் கப்பட்டவுடன், அது குறித்த விவரங்களை குறுந் தகவல், இ-மெயில், வாட்ஸ்அப் மூலம் தெரியப் படுத்துமாறு வங்கிகளுக்கு ஒன்றிய அரசு அறி வுறுத்தி உள்ளது.
ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சமூக வலைத்தள வசதி களை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள் ளப்பட்டு உள்ளது. ஓய்வூதியம் வங்கிக்கணக்கில் வரவு வைத்தவுடன், ஓய்வூதிய சீட்டை உடனடி யாக அனுப்புமாறு அறிவுறுத்தி உள்ளது.
இந்த சீட்டில், வங்கிக்கணக்கில் வரவு வைக்கப் பட்டுள்ள மாதாந்திர ஓய்வூதிய தொகை, வரி விலக்குகள் (இருந்தால்) உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் ஓய்வூதிய செயலாக்க மய்யங் களுடன் கடந்த மாதம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூத் தியத்துறை கூறியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியம் குறித்த விவரங்களை வாட்ஸ்அப் மூலமும் பயனாளிகள் இனிமேல் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment