கியூபாவில் உணவு, மருந்துகள் மீதான சுங்க வரி ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

கியூபாவில் உணவு, மருந்துகள் மீதான சுங்க வரி ரத்து

ஹவானா, ஜூல 17- கியூபா நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப்பரவ லுக்கு மத்தியில் உணவுப் பொருட்களுக்கும், மருந்து ப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலைவாசிகள் கடுமை யாக உயர்ந்துள்ளன.

உணவுப் பொருட்க ளுக்கும், மருந்துப் பொருட் களுக்குமான சுங்க வரி கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக அமைந்தது. இந்த கோரிக் கைகளை வலியுறுத்தி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தி னர். அங்கீகாரமற்ற போராட் டங்கள், அரசு எதிர்ப்பு போராட்டங்கள் அங்கு சட்டவிரோதம் ஆகும். எனவே இந்த போராட் டங்களால் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், உண வுப்பொருட்கள், மருந் துப்பொருட்கள் மீதான சுங்க வரிகளை தற்காலிக மாக ரத்து செய்து கியூபா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கியூபா செல்கிற பயணிகள் இந்த ஆண்டு இறுதிவரையில் வரம் பின்றி உணவு, மருந்து பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment