ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிகல், சென்னை:

· பெகாசஸ் ஒட்டு கேட்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் என்.ராம், சசிகுமார் தொடுத்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அடுத்த வாரம் விசாரிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா  உத்தரவிட்டுள்ளார்.

· காப்பீட்டுக் கழகத்தில் அரசின் பங்குகளை குறைத்து தனியார்க்கு அளிக்கும் மசோதாவை ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிமுகம் செய்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டில்லி வருகை தந்து எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்திட உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  தெரிவித்துள்ளார்.

· அய்க்கிய ஜனதா தளத்தின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் டில்லியில் இன்று கூடுகிறது. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

தி இந்து:

· திமுக தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இல்லாதிருந்தால், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடுகளில்  இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட்டிருக்க  மாட்டார் என காங்கிரஸ் கட்சியின் ரஞ்சித் சிங் சுர்ஜிவாலா கருத்திட்டுள்ளார்.

தி டெலிகிராப்:

· பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் ஆகியோர் ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளனர் என கட்டுரையாளர் தேவ் ராஜ் குறிப்பிடுகிறார்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment