பா.ஜ.க. அல்லாத கட்சிகளை ஓரணியில் திரட்ட மம்தா திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

பா.ஜ.க. அல்லாத கட்சிகளை ஓரணியில் திரட்ட மம்தா திட்டம்

கொல்கத்தா, ஜூலை 17- அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024ஆம் ஆண்டு நடக்கிறது. அதில், பா...வை ஆட்சிக்கட்டிலில் இருந்து கீழே இறக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுகின்றன.

இதற்கிடையே, மேற்கு வங்காள மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா  பா... அல்லாத அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்ட திட்ட மிட்டுள்ளார். இதற்காக அவர் இம்மாதம் டில்லி செல்கிறார்.

அநேகமாக, 25ஆம் தேதி அவர் டில்லி செல்லலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட் டாரங்கள் தெரிவித்தன.

அவர் டில்லி செல்லும் நேரம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நேரமாக இருப்பதால், பல்வேறு அரசியல் கட்சி தலை வர்கள் டில்லியில் முகாமிட்டு இருப்பார்கள். எனவே, அவர் களை எல்லாம் மம்தா  சந்திக் கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்திப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்த லுக்காக, பா... அல்லாத கட்சி களை ஓரணியில் திரட்டுவது பற்றி அவர் ஆலோசனை நடத் துகிறார்.

டில்லியில் சில நாட்கள் தங்கி இருப்பார். சில வெளிமாநிலங் களுக்கும் அவர் செல்வார் என்று தெரிகிறது.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பெற்ற அமோக வெற்றியால் மம்தாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. அத்துடன், தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுவதற்காக அவர் இந்த முயற்சியில் ஈடுபடுவதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

டில்லி பயணம் குறித்து மம்தா கூறியதாவது:-

எனது டில்லி பயணம் வழக்கத்துக்கு மாறானது அல்ல. தேர்தல் முடிந்தவுடன் டில்லி சென்று பழைய, புதிய நண் பர்களை சந்திப்பது வழக்கம். இப்போது, கரோனா கட்டுப் பாட்டுக்குள் இருப்பதால் டில்லி சென்று சில நாட்கள் தங்க போகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment