- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
10.7.2021 அன்றைய தொடர்ச்சி...
பார்ப்பன அடிமைகள்
இந்துக்களில் ஆயிரம் உண்டு இங்கு ஜாதி. இந்த ஜாதியில் எந்த ஜாதியிடம் கொடுப்பது, சமூகத்தில் மேல் மட்டத்தினர் என்கிற அவ்வாறு நம்ப வைக்கப்பட்டுள்ள பார்ப்பனர்களிடம் தான் அனைத்து அதி காரமும் போய்ச் சேரும். ஆகவே அதன் ஆழத்தில் இருக்கும் உண்மை இந்துக் கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்ப னர்களிடம் கொடுத்துவிடு என்பதுதான். பார்ப்பனர்கள் ஒன்றாயிருப்பது போல் பார்ப்பனரல்லாதவர் ஒருவருக்கொருவர் முட்டிமோதிப் பார்ப்பனரிடமே இருந்து விட்டுப் போகட்டுமே எனும் தீங்கான முடிவிற்கு வரவழிவகுக்கும். அன்றைக்கு அதாவது ஒரு நூற்றாண்டிற்கு முன்பு இந்து அறநிலையச் சட்டமுன் வரைவை எதிர்த் தவர்கள் எதிர்த்து எழுதியது, பேசியது ஆகியவற்றுடன் நின்றுவிடவில்லை. அரசப் பிரதிநிதி (வைஸ்ராய்) ரீடிங்கை போய்ப் பார்த்து மனு அளித்து, பிரபுவே இதில் கையெழுத்திடாதீர்கள், இது இந்து மக்களின் அதாவது இந்து மக்களின் உணர் வைப் புண்படுத்துகிறது என ஒப்பாரி வைத் தனர்.
வைசிராய் ரீடிங்
அவ்வாறு முறையிட்டவர்கள் பார்ப்ப னர்கள் மட்டுமா? பார்ப்பனர் அல்லாதவர் களையே இன்றுபோல் அன்றும் முன் நிறுத்தினர். நம்மவர்களில் தான் அடிமைகள் எளிதாகக் கிடைக்கிறார்களே. இதன் விளைவு அரசப் பிரதிநிதிக்குப் பல்வேறு ஜாதியினரும் இந்தச் சட்ட முன் வரைவை எதிர்க்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே அவர் அந்தச் சட்ட முன் வடிவைச் சட்டமாக்குவதற்கான ஒப்பு தலைத் தரும் தன் கையெழுத்தை இட வில்லை.
சென்னை மாநில ஆளுநர் வெலிங்டன்
அதே நேரத்தில் சென்னை மாநில ஆளுநராயிருந்த வெலிங்டன் கள நில வரம் அறிந்தவராததால் இதில் கையொப்ப மிடுவதில் பிழை ஏதுமில்லை என்பதோடு அரசப் பிரதிநிதியிடமும் பேசினார்.
ஆளுநர் வெலிங்டன் கையொப்பம் இடலாம் என்கிறார். அரசப் பிரதிநிதி கையொப்பம் இடக்கூடாது என்கிறார். இது ஆளுநர், அரசப் பிரதிநிதி இடையே சிக்கலை உருவாக்கியது. மேலே உள்ளவர் என்பதால் ரீடிங் கையெழுத்திடவில்லை. 1922இல் பனகல் அரசர் ஆட்சியில் கொண்டு வந்த சட்ட முன்வரைவு கிடப்பில் போனது. 1923இல் பனகலின் முதல் பதவிக் காலம் முடிந்து 1923இல் தேர்தலைச் சந்தித் தார். அதுவரை சட்ட முன் வடிவு சட்டமாகாமல் இருந்தது.
பாட்டன் கட்சி உறுதி
நீதிக்கட்சி திமுகவின் பாட்டன் கட்சி ஆயிற்றே. சொன்னதைச் செய்வோம். சொல்வதை செய்வோம் எனும் கோட்பாடு அன்றும் இருந்தது. 1923ஆம் ஆண்டுத் தேர்தலின்போது “நாங்கள் மீண்டும் ஆட் சிக்கு வந்தால் அந்த இந்து அறநிலையத் துறைச் சட்டத்தை நிறைவேற்றுவோம் எனும் உறுதிமொழியை கூறினார்கள்.
நிறைவேறியது
1923ஆம் ஆண்டுத் தேர்தலில் நீதிக் கட்சி பெரும்பான்மையைப்க பெற்று வென்றது. 1924இல் அறநிலையத்துறை சட் டத்தைப் பனகல் அரசர் நிறைவேற்றினார்.
காமராசர் ஆட்சியிலும்
இன்றுபோல் காமராசர் முதல்வராக இருந்தபோதும் விவாதம் எழுந்தது. காமராசர் அதனை ஏற்கவில்லை. அரசிடம் தான் இருக்க வேண்டும் என உறுதியாக கூறிவிட்டார். பக்தவச்சலம் அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார். அன்றிலி ருந்து இன்றுவரை அரசின் நிருவாகத்திற் குட்பட்ட துறையாகவே இருந்து வருகிறது.
திமுக ஆட்சியில்
திமுக ஆட்சிக்கு வந்த போது அற நிலையத்துறை நாவலர் நெடுஞ்செழியன் பொறுப்பில் இருந்தது. பகுத்தறிவுவாதி அவர்களால் திராவிட இயக்க ஆட்சியில் ஆலய நிருவாகம் சிறப்பாகவே நடை பெற்று வந்தது. வழிபாடுகள், திருவிழாக்கள், குடமுழுக்குகள், ‘சீரங்கநாதரையும், தில்லை நடராசரையும் பீரங்கி கொண்டு பிளப்பது எக்காலம்‘ என்று பேசியவர்கள் ஆட்சியில் குறையேதுமின்றி 50 ஆண்டு களாக நடைபெறுகிறது. கோயில் சொத் தைக் கழகத்தவர் எவரும் கொள்ளையடித்து விடவில்லை.
கடவுள் நம்பிக்கையில்லாதவன் கரு வறை நுழைவுப் போராட்டத்தை ஏன் நடத்த வேண்டும்?
கோயில்களை நம்ப வேண்டாம். கடவுளை நம்ப வேண்டாம் என்று கூறுவது ஒரு பக்க வாதம் எனில், நம்புகிற மக்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது மற்றொரு பக்க வாதம்.
அரசிடம் இருக்க வேண்டும்
அறிவுத்தளம் சார்ந்து பகுத்தறிவு அடிப் படையிலானது. இரண்டாவது கருத்து உரிமை அடிப்படையிலானது. நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு உள்ளே செல்ல உரிமை வேண்டும். அரசாங்கம் என்பது பல்லாயிரக்கணக்கான மக்களுக்குரியது. கோயில்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு உரியவை. கோடிக்கணக்கான மக்களுக் குரிய அரசுதான் இதை நிருவகிக்க வேண் டும்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டுடன் முடிப் போம். சிதம்பரம் நடராசர் கோயில் கலை ஞர் ஆட்சியில் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன்பின் ஒரே மாதத்தில் 24000 ரூபாய் வருவாய். ஜெயலலிதாவின் ஆதர வினால் மீண்டும் சிதம்பரம் கோவில் தீட்சதர் கைமாறியது. விளைவு எவ்வளவு வருவாய், என்ன என்ன நகைகள் களவு போயிற்று என்று செய்தி வெளிவராமல் மறைக்கப்படுகிறது.
இப்போதாவது அரசின் கீழ் இருந்தால் என்ன நன்மை என்பதைச் சிந்தியுங்கள்.
No comments:
Post a Comment