புதுடில்லி, ஜூலை 17 கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகள் மேலாண்மை வாரியங்களின் அதிகார வரம்புக்கான அரசி தழ் அறிவிப்புகளை ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், இரண்டு மாநி லங்களில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை சார்ந்து பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களின் ஒழுங்குமுறை, செயல்பாடு மற்றும் பராமரிப் புக்கான அதிகாரம் கோதாவரி நதி மேலாண்மை வாரியம் மற்றும் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்துக்கு கிடைக்கும். நீர்வளங்களை இரு மாநி லங்களில் சிறப்பாக பயன்படுத்த இது உதவும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
நீண்ட காலமாக நிலுவை யில் இருந்த இந்த இரு வாரி யங்களுக்கான அதிகார வரம்பு குறித்த அறிவிப்பு 2020 அக் டோபரில் நடைபெற்ற தலைமை குழுவின் இரண்டாவது கூட் டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் தலைமை யில் நடைபெற்ற இந்த கூட்டத் தில் கோதாவரி நதி மேலாண்மை வாரியம் மற்றும் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியம் ஆகிய வற்றுக்கான அதிகார வரம்பு இந்திய ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படும் என்று முடி வெடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு, கோதா வரி நதி மேம்பாட்டு வாரியம் மற்றும் கிருஷ்ணா நதி மேம் பாட்டு வாரியத்திற்கு தலா ஒன்று என இரண்டு அரசிதழ் அறிவிப்புகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கா னாவில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆற்று படுகைகளில் செயல்படுத்தப்படும் திட்டங் களின் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் பராமரிப்புக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இரு மாநிலங்களின் மக்கள் சம அளவில் பலன்களை பெறுவதை உறுதி செய்வதற் காக இந்த இரண்டு வாரியங் களின் சுமுகமான செயல்பாட் டுக்கு இரு மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று ஒன்றிய அரசு எதிர்பார்க் கிறது.
No comments:
Post a Comment