உங்கள் அய்வரின் உரைகளைக் கேட்ட எங்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உணர்ச்சிகளைக் கொட்டினீர் - இளமைப் பாலை எங்கள் முதுமைக்கு ஊட்டினீர். உங்கள் அய்வரின் உரைகள் என் நெஞ்சைத் தொட்டன. பெரியார் சுடரை - உங்கள் கைகளுக்கு மாற்றிக் கொடுக்கிறோம். பெரியார் உலகம் புரட்சியானது. அது அறிவுப்புரட்சி, ஆயுதப் புரட்சியல்ல - உங்களை உயர்த்தக் கூடியது - உண்மைகளை உலகுக்கு உணர்த்தக் கூடியது.
'இந்தப் பயிற்சிக்கு வரவில்லையென்றால் மாட்டு மூத்திரத்தைக் குடித்திருப்போம்' என்றீர்கள். அப்படியென்றால் இந்தப் பயிற்சி எத்தகைய மாற்றத்தை உங்களுக்கு ஊட்டியிருக்கிறது!
உங்களை எல்லாம் ஒரே இடத்தில் சந்திக்க விரும்புகிறேன். இந்தக் கரோனா தொல்லை ஒழியட்டும் - சந்திப்போம்.
உங்களை உயர்த்தும் பொறுப்பு எங்களுக்கானது. நம்முன் உள்ள பிரச்சினை என்ன?
திராவிடமா - ஹிந்துத்துவாவா? என்பதுதானே!
தந்தை பெரியார் கூறுவார். "ஒன்று நம்முடையதா அந்நியமானதா என்பதை அதன் பெயர் எந்தமொழியைச் சார்ந்தது என்பதைப் பார்த்தாலே தெரியும்" என்பார்.
திராவிடம் நம்முடையது - நம் மொழியைச் சார்ந்தது. ஹிந்துத்துவா சமஸ்கிருதத்தைச் சார்ந்தது - பார்ப்பனர்களைச் சார்ந்தது. திராவிடம் என்கிறபோது அது வெறும் இனம் மட்டுமல்ல, பண்பாடு - சமதர்மம், சம ஈவு, சம உடைமை, சம நோக்கு, சம உணர்வு, சம நுகர்ச்சி, சம அனுபவம், சம ஆட்சித்தன்மை இவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது.
திராவிடம் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - ஹிந்துத்துவா மதவாதம் - மாச்சரியம்.
திராவிடம் - Inclusive இணைப்பது.
ஆரியம் - Exclusive பிரிப்பது.
ஹிந்துத்துவா - வருணதரும அடுக்குமுறை ஜாதி அமைப்பு!
திராவிடம் - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! திராவிடம் - அனைவருக்கும் அனைத்தும். ஆரியம் - இன்னாருக்கு இன்னது என்ற பாகுபடுத்தும்தன்மை! வேதவாக்கு - கேள்விக்கு இடமில்லை.
எதையும், ஏன் எதற்கு என்று கேள்வி கேள் - அதுதான் பெரியார்.
திராவிடமா - ஹிந்துத்துவாவா? இதுதான் நம்முன் உள்ள கேள்வி. குளித்த குதிரை, மதம் கொண்ட யானை, படித்த சூத்திரன் ஆபத்தானவர்கள்
- இது தான் ஹிந்துத்துவா - ஆரியம்! ஜாதி - வேதம் - பகவத் கீதை.
மனுதர்மம் - விவேகானந்தர் - கோல்வால்கர் - இன்றுவரை கட்டிக் காக்கப்படுவது; பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் - பகவத்கீதை.
ஜாதி ஒழிப்பு - பெண்ணியம் ஒழிப்பு - பெரியார் கொள்கை!
திராவிடம் - சமூக விஞ்ஞானம். ஆரியம், ஹிந்துத்துவா - சமூக அஞ்ஞானம்.
இப்பொழுது சொல்லுங்கள் நமக்குத் தேவை திராவிடமா? ஹிந்துத்துவாவா?
- கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் மண்டலங்களின் பெரியாரியல் பயிற்சி வகுப்பு காணொலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி (30.6.2021)
No comments:
Post a Comment