பொத்தானை தட்டினால் கண்ணாடியாக மாறி, எதிரில் இருப்பவைகளை பிரதிபலிக்கும். பொத்தானை அணைத்தால் எதையும் பிரதிபலிக்காமல், ஒளியை சிதறடிக்கும். இப்படி ஒரு விந்தை பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலைனாபல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானிலுள்ள கியூசு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.
உலோகங்களின் மேற்பரப்பு ஒளியை பிரதிபலிக்கும். எனவே அவற்றால் கண்ணாடி போலவும் செயல்பட முடியும்.திரவ உலோகங்களும், பளபளவென்று இருப்பதால், அவையும் கண்ணாடி போலவே செயல்படும். ஆனால், சிறிதளவு மின்சாரம் பாய்ச்சுவதன் மூலம், திரவ உலோகங்களின் மேற்பரப்பு ஆக்சிஜனேற்றம் கொள்கிறது.
இதனால், ஒளியை சிதறடிக்கும் தன்மை மேற்பரப்புக்கு வந்துவிடுகிறது.இந்த எளிய யுக்தியை வைத்து, மின்சாரம் பாய்ச்சாதபோது கண்ணாடி போலவும், பாய்ச்சினால் பிரதிபலிக்காத பரப்பு போலவும் திரவ உலோகத்தை பயன்படுத்த முடியும். பொழுதுபோக்கு துறை, நோயறிதல், தொலைநோக்கிகள் போன்ற துறைகளில் குணம் மாறும் திரவ கண்ணாடி தொழில்நுட்பம் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடும்.
No comments:
Post a Comment