“கொங்குநாடு என்பது குடியேறிய மார்வாரி எனும் மார்வாடிகளின் கூச்சலே’’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

“கொங்குநாடு என்பது குடியேறிய மார்வாரி எனும் மார்வாடிகளின் கூச்சலே’’

சூர்யா சேவியர்

கொங்குநாடு என்பது தமிழர்களின் குரல் அல்ல. கவுண்டர்களின் குரலும் அல்ல. கோவை-திருப்பூரில் குடியேறிய மார்வாரி எனும் மார்வாடிகளின் கூச்சலே.

மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள். இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வாடி என்பது சந்தை சார்ந்த சொல் என்பதால் வியாபாரிகளை இங்குள்ளவர்கள் மார்வாரிகள் என்றழைக்காமல் மார்வாடிகள் என்றார்கள்.

பிர்லா, கோயங்கா, மித்தல், கன்ஷியாம்தாஸ், ஓஸ்வால், சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பொத்தார், பிரமல், ஜுன்ஜுன்வாலா என பல பெயர்களில் உள்ள மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகம் முழுவதும் உள்ளது

வாடி என்றால் பொதுவான இடம் என்றே பொருள். மீன் குவியலாக வைத்திருக்கும் இடத்திற்கு மீன்வாடி என்றும், மர வியாபாரம் நடக்கும் இடத்திற்கு மரவாடி என்றும், விறகு வியாபாரம் நடக்கும் இடத்திற்கு விறகுவாடி என்றும் தமிழில் பெயர்.

வணிகர்கள் கூடும் இடமாக ஆலமரம் இருந்தது. ஆலமரத்தின் அடியிலேயே பெரும் சந்தைகள் கூடும்.இந்த வணிகர்களே பனியா என்றழைக்கப்பட்டவர்கள். இதைப் பார்த்த ஆங்கிலேயர்கள் ஆலமரத்தை தங்களின் ஆங்கில அகராதியில் இணைத்த சொல்லே பானியன் ட்ரீ என்பது. இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொல்லே பானியன்.

செந்தமிழ்நாடு என்று இன்றைய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளை இணைத்து தொல் காப்பியம் கூறும் 12 நாடுகளில் கற்கா நாடும் ஒன்று. கற்கா நாடு என்றால் மலைகள் சூழ்ந்த கோயம்புத்தூர் நிலப்பகுதி தான். பெருந்துறை அருகே விஜயமங்கலம் எனும் ஊரை தலைமையாக கொண்டு சமணர்கள் தமிழ் நிலப்பரப்பில் கி.மு 3ஆம் நூற்றாண்டில் நுழைந்தனர்.

இங்கிருந்த தமிழ் மக்களும் சமண மதத்தை ஏற்றனர். சமணர்களால் விஜயமங்கலத்தில் உருவாக்கப்பட்ட இலக்கிய நூலே நன்னூல். கொங்கு வேளிர் என்ற சமணரால் எழுதப் பட்டதே பெருங்கதை. கொங்கு என்பது சமணர் உருவாக்கிய சொல்லே.

சமணம் பார்ப்பனியத்தால் அழிக்கப்பட்டது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் சமணத்தை அழித்து சைவமும், பவுத்தத்தை அழித்து வைணவமும் எழுந்தது. பார்ப்பனியத்தால் கொங்கு சமணர்கள் கேலிக்கு உள்ளான சொல்லேகூறுகெட்ட

கொ ங்காப்பயலுக’’ என்பது.

அன்றைய கொங்கு பகுதியில் சமணம் கோலோச்சிய காலத்தில், சமண தீர்த்தங்கரர் 24 பேரின் நினைவாக உருவாக்கப்பட்டதே கொங்கு உட்பிரிவின் 24 நாடுகள். வடக்கே ஜைனர்கள் எனப்பட்டோரே தமிழகத்தில் சமணர் எனப் பட்டனர். மகாவீரரை மய்யப்படுத்திய சமயம்.

கேவலப்பய என்பது சமணர்களே. தத்துவத்தில் உலகாயதமும்,வைதீகமும் உயிர் குறித்தும் ஜடம் குறித்தும் தத்துவச் சண்டை நடத்தியது. கடவுள் மறுப்பாளர்களே உலகாயத வாதிகள். மகாவீரர் உயிரும் ஜடமும் நித்தியமானது என்று கூறினார். ஆத்மாவைப் பற்றி அறிவதே ஞானம் என்றார். அதாவது உடலுடன் உயிர் பிரியும் போது அது ஆத்மாவாக இருக்கிறது என்பதே அந்த ஞானம்.

சமண மரபில் இதற்கு கேவல ஞானம் எனப்பெயர். கேவலம் என்றால் தவறான பொருள் அல்ல.முழு முற்றான ஞானம் என்றே பொருள். கேவலப்பய என்றால் சமணஞானி என்று அர்த்தம்.பார்ப்பனர்கள் சமணர்களை கேலி பேசிய சொல்லேகேவலப்பய’’ என்பது.

இந்தியப் பிரிவினையின் போதுஆராவல்லி மலைத் தொடருக்கு மேற்கே, ராட்கிளிப் எல்லைக்கு கிழக்கே உள்ள பிகானீர், ஜோத்பூர், ஜெய்சல்மீர் பகுதியில் இருந்து குஜராத்திகள், ராஜஸ்தான் மார்வாடிகளே அதிகளவு தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தனர்.

புலம்பெயர்ந்த மார்வாடிகளில் 80% பேர் ஜெயின்கள். அதிலும் ஆதிக்கம் பெற்ற ஜாதியினர் பாப்னா, மேத்தா மற்றும் டிப்ரிவால் போன்றவர்கள் அதிகம் வந்தனர். இவர்கள் தொழில் செய்யவே விரும்புவார்கள். கல்வியில் ஆர்வம் இருக்காது.

1951இல் குஜராத்திகளால் புரூக் பாண்ட் ரோட் அருகில் கிக்கானி பள்ளி தொடங்கப்பட்டது. உடனே மார்வாடிகளால் கல்வி நிலையம் தொடங்க நடவடிக்கை எடுத்தார்கள். 1964ல் கோயம்புத்தூர் வெல்பேர் அசோசியேசன் தொடங்கி சிறீ நேரு வித்யாலயா பள்ளியை பூமார்க்கெட் பகுதியில் ஆரம்பித்தனர்.

அதன்பிறகு கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில்ராஜஸ்தானி சங்என்ற பெயரில் ஒரு சங்கத்தை 1972இல் ஆரம்பித்தனர். பூமார்கெட் பகுதியில் இயங்கிய இப்பள்ளி 1973இல் ஆர்.எஸ்.புரத்தில் அய்ந்து ஏக்கர் நிலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது,1989 சிறீநேரு மகா வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியை பொள்ளாச்சி- கொச்சி தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் மலுமிச்சம்பட்டிக்கு அருகே ஆரம்பித்தனர்.

கோவையில் கவுண்டர்கள் உள்ளிட்ட பிற ஜாதியினரிட மிருந்து பெரும் தொழில்களும், நிலங்களும் இப்போது இவர்கள் கையில் மாறிவிட்டது. வெளியே இஸ்லாமியர்களுக்கு எதிராக தூண்டி விடுவார்கள்.

ஆனால் பறிக்கப்பட்ட சொத்துகள் பெரும்பாலானவை கவுண்டர்களுடையதே. ரத்தினசபாபதி புரம் என்பதையே ஆர்.எஸ்.புரம் என்று சுருக்கி அழைக்கிறார்கள். ஆனால் மார்வாடிகள் அதைராஜஸ்தான் சங் புரம்என்று மாற்றி அழைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு.

ராஜஸ்தான் மார்வாடிகளால் அங்குள்ள சமணக் கோவில்கள்  புதுப்பிக்கப்படுகிறது. மார்வாடிகளின் ஜெயின் மதத்தில் பர்யூசன் பர்வ் என்ற 8 நாள் பண்டிகை உண்டு. அப்போது கடுமையான விரதத்தை கடைப்பிடிப்பார்கள். ஆனால் பார்ப்பனிய மதத்தோடு கலந்தே இருக்கின்றனர். பாஜக கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகளில் இவர்கள் அதிகம்.

தமிழகத்திற்குள் மார்வாடிகளின் நாடே கொங்குநாடு எனும் கூச்சல். கொதிப்பதை அடக்க வேண்டுமானால் எரிவதைப் பிடுங்க வேண்டும். இந்திய ஒன்றியத்தில் எவரும் எங்கும் குடியேறலாம். வியாபாரம் செய்யலாம்.

ஆனால் வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் நாட்டை பிடித்தான். வெள்ளையனுக்கு சவர்க்கார் சங்கிகள் குனிந்து கொடுத்தனர். இப்போது மார்வாடிகளுக்கு பாஜக சங்கிகள் குனிந்து கொடுக்கின்றனர். இதை மறந்துவிடக்கூடாது. முதலாளி கள்- தொழிலாளிகள் என்று இருந்த பகுதியை, மதவெறி சார்ந்த பகுதியாக மாற்றியதில் மார்வாடிகளின் பங்கே முதன்மையானது.

நிர்வாக வசதிக்காக கொங்குநாடு என்றால், இந்தியாவையும் நிர்வாக வசதிக்காக அய்ந்தாகப்  பிரித்தால் அய்ந்து பிரதமர்கள் கிடைப்பார்கள் என்ற குரல் எழுகிறது.

No comments:

Post a Comment