தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை,ஜூலை16- தொழிலாளர் நலத்துறையுடன் புதிதாக திறன் மேம்பாட்டுத்துறையை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலக இளைஞர் திறன் நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான வித்துக்கள்! தமிழ் நாட்டு இளைஞர்களின்திறன் அதிகரிக்க அரசின் திட்டங்கள் அமையும் என்பதால்தான் தொழிலாளர் நலத்துறையுடன் 'திறன் மேம்பாட்டுத் துறை' புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நம் இளைஞர்களின் திறன் உலக அரங்கில் ஒளிரட்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment