பூவிருந்தவல்லி, ஜூலை1- பூவிருந்தவல்லி வடக்கு மலையம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடவுளர் சிலைகள் மற்றும் கட்டடத்தை கட்டியிருந்தனர். அரசுத்துறை அலுவலர்களின் உத்தரவின்பேரில் கடந்த 27.6.2021அன்று சிலைகள் அகற்றப்பட்டு கட்டடம் அதிகாரிகளால் இடித்து தள்ளப்பட்டது.
அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பை எதிர்த்து களமிறங்கியவரான திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சென்னை மண்டல பொறுப்பாளர் து.சாந்தசீலனை பாராட்டி ஆவடி மாவட்ட கழக துணை செயலாளர் பூவை தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் தி.மணிமாறன், பூவை இளைஞரணி தலைவர் சு.வெங்கடேசன், மாணவர் கழகம் கா.சவுமியா ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment