புதுடில்லி, ஜூலை 16 தீர்ப்பாயங் களின் உறுப்பினர்களின் பதவிக் காலம் 4 ஆண்டுகள் என நிர்ணயித்த ஒன்றிய அரசின் அவசர சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம், தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப் பாயம் உள்ளிட்ட தீர்ப்பாயங் களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி சென்னை வழக்குரைஞர்கள் சங்கம், ராஜஸ்தான் வழக்குரை ஞர்கள் சங்கம், தேசிய கம்பெனி சட்ட தீப்பாய வழக்குரைஞர்கள் சங்கம் ஆகியவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை நீதி பதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசா ரித்தது.
கடந்த மே 24ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பா யம், தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப் புகள் குறித்தும் சுட்டிக் காட்டப் பட்டது.
அப்போது நீதிபதிகள், தீர்ப் பாயங்களில் காலியாக உள்ள பணியிடங் கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கும், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒன்றிய அரசு எவ்வித முடிவும் எடுக் காமல் இருப்பதற்கும் கவலை வெளியிட்டனர்.
அதற்கு ஒன்றிய அரசின் சார்பில், தீர்ப்பாயங்களில் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அவ சர சட்டத்தில் உறுப்பினர் களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு காரணமாக தீர்ப் பாயங்களில் காலியாக உள்ள பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள் ளன என வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், தீர்ப் பாயங்களுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை குறிப்பிடாமல் உடன டியாக நியமனங்களைத் தொடங் குங்கள். உறுப்பினர்களின் பதவிக் காலம் உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு வரு மாறு:- ஒன்றிய அரசின் சார்பில், தீர்ப்பாயங்களில் நியமிக் கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு மாறாக, பதவிக்காலம் 4 ஆண் டுகள் என நிர்ண யிக்கும் சட்டம் நீதித்துறை சுதந்திரத்துக்கு முரணாக உள் ளது. எனவே அரச மைப்பு சட் டத்துக்கு எதிரான அந்த சட்டம் செல்லாது.
பல்வேறு தீர்ப்பாயங் களில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment