நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் மெரினாவில் ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் மெரினாவில் ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு

சென்னை, ஜூலை 1- கரோனா பரவல் காரண மாக மெரினா கடற்க ரைக்கு செல்ல பொது மக்கள் இன்னும் அனு மதிக்கப்படவில்லை. கடந்த 50 நாட்களாக இந்த தடை உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் 28-ஆம்தேதி முதல் ஊரடங்கு தளர் வின் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் நடைபயிற்சிக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்தது.

காலை 6 மணியில் இருந்து 9 மணி வரையில் 3 மணி நேரம் மட்டுமே நடைபயிற்சி மேற் கொள்ள பொதுமக்க ளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக மெரினா கடற்கரையில் தினமும் நடைபயிற்சிக் காக மக்கள் கூடுகிறார் கள். ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேர் வரையில் நடைபயிற்சி செய்கிறார்கள்.

இதுபோன்று நடைபயிற்சி மேற்கொள்கிறவர் கள் கரோனா விதிமீறல் களில் ஈடுபடுகிறார்கள். மாஸ்க் அணியாமல் செல்வதுடன் ஒருவருக்கு ஒருவர் உரசியப்படியும் நடந்து செல்கிறார்கள். இதுபற்றி காவல்துறையி னருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர்ஜிவால் மெரினா கடற்கரையில் நடைபயிற்சியின் போது கண் காணித்து அறிவுரை வழங்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இணை ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் பகலவன் ஆகியோர் மேற்பார்வை யில் திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ் கர், ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் இன்று கரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நடைபயிற்சி சென்றவர் களை சந்தித்து கரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறி வுரை கூறினார்கள்.

இது தொடர்பாக ஒலி பெருக்கி மூலம் அறிவிப்புகளை வெளியிட்ட னர். முக கவசம் அணியா மல் நடைபயிற்சி மேற் கொள்ள கூடாது. சமூக இடைவெளியை கடை பிடித்து நடைபயிற்சி செய்ய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.

நடைபயிற்சியை முடித்து விட்டு பலர் மெரினா கரையோரம் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் காவல் துறையினர் அறிவுரை வழங்கினார்கள்.

மெரினா கடற்கரை யில் நரிக்குறவர்கள் பலர் குடும்பத்தோடு அமர்ந்து இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். இதையடுத்து உதவி ஆணையர் பாஸ்கர் அவர்களுக்கு மாஸ்க் வழங்கி கரோனா விழிப் புணர்வை ஏற்படுத்தினார்.

இதுபோன்று அருக ருகே அமர்ந்து பேசினால் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர்களிடம் காவல்துறையினர் அறிவுறுத்தினார்கள்.

மெரினா கடற்கரை யில் நடைபயிற்சிக்கு மட் டுமே அனுமதி அளிக்கப் பட்டுள்ள நிலையில் ஒரு சிலர் தடையை மீறி மணல் பகுதிகளுக்கு சென்று விடுகிறார்கள். இதுபோன்ற நபர்களை யும் காவல்துறையினர் கடற்கரையில் இருந்து வெளியேற்றி வருகிறார் கள்.

இப்படி கடற்கரை பகுதியில் யாராவது நட மாடுகிறார்களா? என்பதை டிரோன் மூலம் கண்காணித்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் கூறும்போது, “பொதுமக்களின் நலன் கருதி மெரினாவில் நடை பயிற்சிக்கு மட்டுமே அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதனை உணர்ந்து விழிப்புணர் வோடு செயல்பட வேண் டும். கரோனா பரவுவதற்கு வழி ஏற்படும். எனவே அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என் றும் தெரிவித்தனர் என் பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment