சென்னை அய்.அய்.டி.யில் ஜாதி மற்றும் மத ரீதியான பாகுபாடுகள் அதிகளவில் பார்க்கப்படுவதுபற்றி தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா, தனது இறுதிக் கடிதத்தில், மத ரீதியான பாகுபாட்டை தான் சந்தித்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொள் வதாகவும் தெரிவித்திருந்தார். சமீபத்தில் உதவிப் பேரா சிரியராகப் பணிபுரிந்து வந்த விபின், ஜாதி ரீதியான பாகு பாட்டிற்கு ஆளானதாகத் தெரிவித்து பணியில் இருந்து விலகினார்.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் முன்னேறிய வகுப்பினர் பேராசிரியர் நியமனங்களில், 154 பேர் தேவைப்பட்ட இடத்தில் 273 பேர் நியமனம் செய்யப்பட் டுள்ளனர். இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவினருக்கு 84 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 29 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல் பட்டியல் சமூகப் பிரிவில் 47 பணியிடங்களில் வெறும்
15 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. பழங்குடியினர் பிரிவை பொறுத்தவரை, 23 பணியிடங்களில் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
இதேபோன்று உதவிப் பேராசிரியர் பணியிடங்களிலும் குறைவான நியமனமே நடந்தது. சென்னை அய்.அய்.டி.யில் பேராசிரியர் நியமனங்களில் பாகுபாடு காட்டப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் 12.7.2021 அன்று 2 மணி நேரம் விசாரணை நடத்தியது. பின்னர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
"சென்னை அய்.அய்.டி.யில் பேராசிரியர் நியமனங்களில் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அய்.அய்.டி.யில் ஆய்வு மேற்கொண்டோம். புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தினோம். இங்கு பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை குறித்த விரிவான அறிக்கையை அய்.அய்.டி நிர்வாகம், அடுத்த 30 நாள்களுக்குள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தாக்கல்செய்ய வேண்டும்" என்றார்.
அய்.அய்.டி. என்றால் "அய்யர், அய்யங்கார் டெக்னாலஜி" என்று சொல்லுவது ஏதோ நகைச்சுவைக்காக அல்ல. கேலி, கிண்டல் செய்வதற்காகவும் அல்ல.
உண்மை நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துவ தற்கான சொல்லாடல்.
பெரும்பாலும் அய்.அய்.டி.யில் இயக்குநர்களாகக் கருநாடகப் பார்ப்பனர்களாகவே இருந்து ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.
எத்தனை எத்தனை வழக்குகள் இந்தக் கிண்டி அய்.டி.யின் மீது - அவை எல்லாம் என்னாயிற்று என்பதற்கே ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்ற ஒரு வழக்கு (W.P.No. 17403/95 4242/97 4256/97, 4257/97) - பேராசிரியர் தேர்வு குறித்து வழக்கு(W.P.No. 6313/98 3570/98) - மேனாள் மக்களவை உறுப்பினர் அன்பரசு தொடுத்த வழக்கு (W.P.No.12128/98) என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு. ஒரு கல்வி நிறுவனத்தின்மீது இத்தனை வழக்குகள் என்பதற்கு இதற்குமுன் எந்த முன்னுதாரணமும் கிடையாது.
கிண்டி அய்.அய்.டி. வளாகத்துக்குள் முறைகேடுகளை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கும் அளவு இல்லை.
ஒரு தடவை 120 நாள்கள் கூடப் போராட்டம் நடத்தப் பட்டதுண்டு (2.11.1998).
அதுவும் நடராசன் என்ற பார்ப்பனர் இயக்குநராக இருந்த போது கடும் போராட்டங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டப் பேரவை உறுப்பினர்களும்கூட நேரடியாகப் பங்கு கொண்ட போராட்டங்களும் உண்டு.
அடி மட்டப் பணிகளில் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் காலை 4 மணிக்கு வந்தால் இரவு 8 மணி வரை வேலை.
இந்த அடிமட்டப் பணியாளர்களுக்கான வீட்டு வசதிகள், அடிப்படை வசதிகளைக்கூட செய்து கொடுப்பதில்லை பார்ப்பன நிருவாகம். இதற்காகவும்கூட வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டதும் உண்டு (W.P. No.16863/95, W.P.No. 5411/95)
No comments:
Post a Comment