மருத்துவர்கள் நலன் காக்கும் அரசாக திமுக அரசு திகழும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 2, 2021

மருத்துவர்கள் நலன் காக்கும் அரசாக திமுக அரசு திகழும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் உறுதி

சென்னை, ஜூலை 2- சென்னை கிண்டியில் கிங்ஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மய்யம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மய்யம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் நேற்று (1.7.2021) திறந்து வைத்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல் கலைக்கழகத்தில் நடைபெற்ற மருத் துவர் நாள் விழாவில் கரோனா பெருந் தொற்று பேரிடர் காலத்தில் மகத்தான பணி புரிந்த மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார்.

சென்னை, கிண்டி, கிங்ஸ் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தில் அமைந்துள்ள அரசு கரோனா மருத்துவ மனையில், சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு அளித்த பதிலுரையில் அறிவித்தவாறு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா விற்குப் பிந்தைய நல்வாழ்வு மய்யத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் நேற்று (1.7.2021) திறந்து வைத்தார். இம் மய்யத்தில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு இருதயம், நரம்பியல், சிறுநீரகம், வயிறு மற்றும் குடல், கண், நீரழிவு,  உளவியல் தொடர்பான சிகிச்சை கள் அளிக்கப்படும். மேலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஊட்டச் சத்து மற்றும் உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றிற் கான வசதிகளும் இம் மய்யத்தில் அமைக் கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, இந்த வளா கத்தில் மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மய்யத்தை தமிழ்நாடு முதல மைச்சர் மு.. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, வெளிநாடு செல்பவர்களுக்கான மஞ்சள் காய்ச்சல் தடுப் பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்டார். இம்மய்யம், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் அவர் களின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இம்மய்யத்தில், பன்னாட்டு பயணி களுக்கு பன்னாட்டு சுகாதார ஒழுங்குமுறை சட்டத்தின்படி ஆப் பிரிக்க மற்றும்  தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள் வோருக்கு 1948இல் இருந்து மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்தும் செலுத்தப்பட்டு, உலக சுகாதார நிலையத்தால் அங்கீகரிக் கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் வழங் கப்பட்டு வருகிறது. தென்னிந்திய மக் களுக்கு பயனளிக்கும் வகையில் மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரே தடுப்பூசி மய்யமாக இந்நிலையம் விளங்குகிறது. மேலும், ஹஜ் பயணம் மேற்கொள் வோருக்கு மூளைக் காய்ச்சல் தடுப் பூசியும் இம்மய்யத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னர், சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல் கலைக்கழகத்தில் நடைபெற்ற மருத்துவர் நாள் விழாவில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தலைமையேற்று, அரசு மருத்துவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் ஆகி யோருக்கும், தனியார் மருத்துவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சங்கங் களுக்கும் வழங்கி சிறப்பித்தார்.     

மேலும், நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி இன மக்களுக்கும், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் 100 சதவிகித தடுப்பூசி போடப்பட்டு, இந்தி யாவிலேயே முதல் மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை விளங்கிட செய்த நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் அவர் களிடம் 55,000 Pulse Oxymeter கருவிகளை சுகாதாரத் துறை பணியாளர்களின் பயன்பாட்டிற்காக தமிழ் நாடு முதலமைச்சர் வழங்கி, மாநில தலைநகரம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் அமைக் கப்பட்ட கரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகளை விளக்கும் குறும்பட தகட்டினையும் வெளியிட்டார்.

கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் ஒருநாள் சம்பளத் தொகையான 7 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை  தமிழ்நாடு முதலமைச்சரிடம்,  தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் மருத்துவர் சுதா சேஷைய்யன் வழங்கினார். 

நிகழ்வின் இறுதியில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.. ஸ்டாலின் மருத்துவர் நாள் விழாவில் பேசியதாவது:

அனைவருக்கும் அன்பான வணக்கம்.

இன்று (1.7.2021) மருத்துவர் நாள். இந்த அரசைப் பொறுத்தவரையில் மக்கள் நலனுக் கான அரசு மட்டுமல்ல, மருத்துவர்கள் நலனுக்கான அரசாக உங் களுக்கு என்றும் துணை நிற்கும் என்பதை எடுத்துச் சொல்லி, மருத்துவ நாள் விழாவில் உங்கள் அனை வரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு பெற்றதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி, உங்க ளுடைய தியாகத்திற்கும் தொடர்ந்து ஆற்றக்கூடிய பணிகளுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளை மீண்டும் தெரி வித்துக் கொள்கிறேன் நன்றி.

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment