சென்னை, ஜூலை 1 தமிழ்நாடு நியாயவிலைக் கடைகளில் பொருட் கள் வாங்க மீண்டும் கைவிரல் ரேகை பதிவு அவசியம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு நேற்று (30.6.2021) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக் களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4 ஆயிரம் இரு தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் கடந்த மே, ஜூன் ஆகிய மாதங்களில் வழங்க ஆணையிடப் பட்டது. ஜூன் மாதத்தில் நிவாரணத் தொகையுடன் 14 மளிகைப் பொருட்கள் வழங்கவும் ஆணையிடப்பட்டது.
இதனைப் பெற நியாய விலைக் கடைகளுக்கு குடும்ப அட்டை தாரர்கள் வரும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமத மின்றி நிவா ரணத்தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப் பட்டது.
புதிய மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்டு கார்டு) கோரி விண்ணப் பித்த மனுக்கள், அரசால் அறிவிக்கப் பட்ட கரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகைப்பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணி மேற் கொள்ளப்பட்ட நிலையிலும், புதிய மனுக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசா ரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற் கான சேவையும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
தற்போது நிவாரண உதவித் தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் முழுவது மாக விநி யோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால் ஜூலை
1ஆம்தேதி (இன்று) முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வ தற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் பதிவையும் மீள செயல்முறைப்படுத்த வும் அனுமதி வழங்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment