மேகதாது அணை கட்ட புதுச்சேரி அரசும் எதிர்ப்பு மோடி, அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 16, 2021

மேகதாது அணை கட்ட புதுச்சேரி அரசும் எதிர்ப்பு மோடி, அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம்

புதுச்சேரி, ஜூலை 16  மேகதாது அணை கட்ட புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட விவசாய நிலங் களுக்கு பயனளித்து வரும் நிலையில் அதை தடுக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்ட முடிவு செய்யப்பட் டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளை கருநாடக அரசு தற்போது தீவிரப்படுத்தி உள்ளது.

இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் மேக தாதுவில் அணை கட்டுவதற்கு புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்க சாமி தனது அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத் தினார். கூட்டத் தில் அமைச் சர்கள் லட்சுமிநாரா யணன், சந்திர பிரியங்கா, காரைக் கால் பகுதி சட்டமன்ற உறுப்பினர் களான  திருமுருகன், பி.ஆர்.சிவா மற் றும் அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கருநாடக, தமிழ்நாடு அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக் கப்பட்டது. புதுவை அரசு சார்பில் இதில் மேற்கொள்ள வேண்டிய நடவ டிக்கைகள் தொடர்பாக விவா திக்கப்பட்டது.

இதன்பின் முதலமைச்சர் ரங்க சாமியின் அலுவலகத்தில் இருந்து 14.7.2021 அன்று இரவு ஒரு அறிக்கை வெளியிடப் பட்டது. அதில், கருநாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாது அணை கட் டுவதாக முன்மொழிந்ததை யொட்டி புதுச்சேரி மற்றும் தமிழ் நாடு அரசு ஏற்கனவே தங்களது அதிருப் தியை தெரிவித்து இருந்தது. கர்நாடக அரசு ஒன்றிய நீர் ஆணை யத்தின் ஒப்புதல் பெற்று தன்னிச் சையாக மேகதாது அணை கட்ட முடிவு எடுத்துள்ளது விவசாயி களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும்.

எனவே கருநாடக அரசின் மேக தாது அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந் திர சிங் செகாவத் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார் என்று கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment