சிவகங்கை மாவட்டம் முத்தனங் கோட்டை கிராமத்தை சேர்ந்த இ.சதீஷ் குமார் - வளர்மதி இணையரின் புதல்வன்
ச.அபிமன்யு (வயது 4) 29.6.2021 அன்று நடந்த உலக சாதனை போட்டியில் தனது தனித் திறமையை 9 நிமிடங்களில் 150 திருக்குறள் சொல்லிக்கொண்டே இந்தியன் அபாக்கஸ் முறையில் தன் மனம் கணித்தல் -75 மேற்பட்ட கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை போட்டு ராபா மீடியா உலக சாதனை இந்திய கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறு வனை நேரில் அழைத்து வெள்ளி பதக்கம், கேடயம், சான்றிதழ் ஆகியவற்றை சிறுவனிடம் வழங்கி பாராட்டியதுடன் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்வில் கமலஹாசன்,பிரசன்னா, பஷீர் அகமது, கார்த்திகா மற்றும் சிவலிங்கம் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment