சென்னை, ஜூலை 1- கரோனா தொற்றிலும் உற்பத்தி பொருட்களை சிறப்பாக விநியோகம் செய்ததற்காக, ‘சுந்தரம் பாஸ்டனர்ஸ்’ நிறுவனத் திற்கு, ‘2020ஆம் ஆண் டின் சிறந்த விநியோகஸ் தர்’ என்ற விருது வழங்கப் பட்டுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமெரிக் காவை சேர்ந்த, ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ நிறுவனத் திற்கு தேவையான பல் வேறு பொருட்களை, சுந் தரம் பாஸ்டனர்ஸ் தயா ரித்து வழங்குகிறது. இது தவிர, 16 நாடுகளைச் சேர்ந்த 122 நிறுவனங்க ளும் இந்த நிறுவனத்திற்கு தேவையான பொருட் களை தயாரித்து வழங்கு கின்றன.
இதில், கரோனா தொற்று காலத்திலும் சிறப்பாக வினியோகம் செய்ததற் காக, 2020ஆம் ஆண்டின் சிறந்த விநியோகஸ்தராக, சுந்தரம் பாஸ்டனர்ஸ் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டுள் ளது. இந்த விருது, 8 ஆவது முறையாக இந் நிறுவனத்துக்கு வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment