பள்ளிக் கட்டணம் செலுத்த முடியவில்லையா? செத்துப்போய் விடுங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

பள்ளிக் கட்டணம் செலுத்த முடியவில்லையா? செத்துப்போய் விடுங்கள்

பாஜக அமைச்சரின் திமிர்ப் பேச்சு

 

போபால், ஜூலை 1- கரோனா காரணமாக பள்ளி - கல்லூரிகள் மூடப் பட்டுள்ள நிலையில், இணையம் மூலமே வகுப் புகள் நடந்து வருகின்றன. எனினும் கல்விக் கட்டண வசூலில் சமரசம் செய் யாத கல்வி நிறுவனங்கள், எப்போதும்போல கறா ராக தங்களின் வசூலை நடத் திக் கொண்டிருக் கின்றன. பயிற்சிக் கட்ட ணத்தை மட்டுமே வசூ லிக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தர விட்டாலும், நன்கொடை என்ற பெயரில் பல ஆயி ரங்களை கட்டணமாக தனியார் பள்ளிகள் வசூ லித்து வருகின்றன. அதி லும், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறப்படு கிறது.

இதுகுறித்து, அம் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மரை, பெற்றோர் கள் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். பள்ளிக் கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதாக வும், அதை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதே நிலைமை நீடித்தால், நாங் கள் செத்து மடிவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஆவேசப்பட்டுள் ளனர். தங்களின் குறைக ளைக் கேட்டு அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள் இவ்வாறு கூறி யுள்ளனர்.

ஆனால், அனைத்தை யும் கேட்டுக்கொண்ட பாஜக அமைச்சர், "கல்விக் கட்டணம் செலுத்த முடியாவிட்டால் எதற்கு உயிரோடு இருக்கிறீர்கள்... “செத்துப் போய் விடுங் கள்என்று ஒரே வார்த் தையில் கூறி, பொதுமக் களை அவமா னப்படுத்தி யுள்ளார். உடனடியாக அந்த இடத்தை விட்டும் காலி செய்துள்ளார்.அமைச்சரின் எதிர்பா ராத இந்த வார்த்தையால் அதிர்ச்சியடைந்த பெற் றோர் சுமார் 80 பேர், அமைச்சரின் அலுவலகத் திற்கு முன்பாகவே போராட்டம் நடத்தியுள் ளனர். அமைச்சர் இந்தர் சிங் பர்மரின் பேச்சு அடங்கிய காணொலி சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், பல்வேறு தரப்பினரும் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக் கையும் அங்கு எழுந்துள் ளது.

No comments:

Post a Comment