சென்னை, ஜூலை 31 கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் ரயில்களில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் உள்ளதா என சோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் ரயில்களில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறி குறிகள் உள்ளதா என சோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
அந்த வகையில் கேரளாவில் இருந்து ரயில் மூலம் தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் அனைத்திலும் கரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. அந்த வகையில் பயணிகள் அனைவரும் ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் நவீன கருவி உதவியுடன் பயணிகளின் உடல் வெப்பம் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை யில் கூடுதல் பாதுகாப்புக்காக ரயிலில் இருந்து வெளியேறும் பயணிகளுக்கும் காய்ச்சல் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு
சென்னை, ஜூலை 31 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,947- பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 68 நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், நேற்று (30.7.2021) தொற்று பாதிப்பு சற்று அதிகரித்தது. இந்த நிலையில், 2ஆவது நாளாக இன்றும் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட தகவலின் படி, தமிழ்நாட்டில் இன்று 1,947- பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,27,611- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,193- பேர் குணம் அடைந்துள்ளனர். கரோனா தொற்றால் இன்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய 1,56,843 - மாதிரிகள் பரி சோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று 215 - பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,934 ஆக உள்ளது.
காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும்
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
சென்னை, ஜூலை 31 தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணை யர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காவலர் கள் உடல்நலன் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கு வாரம் ஒருநாள் விடுப்பு தரப்பட வேண்டும் எனவும் காவலர்களின் பிறந்தநாள், திருமண நாள்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணியில் ஈடுபடும் வார விடுமுறை தேவைப்படாத காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில்
ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி, ஜூலை 31- தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக் சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி அளித்த அனுமதி இன்றுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது. உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, ஆலை யின் அனைத்து இயக்கங்களும் 31ஆம் தேதியுடன் முழு மையாக முடிவுக்கு வரும் வகையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 2,132 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜனை தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
மேலும் ஆலை வளாகத்தில் 134 டன் திரவ ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை மேலும் 6 மாதம் நீட்டிக்கக்கோரி நாங்கள் தாக்கல் செய்த மனு வருகிற 6ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும், இருப்பில் உள்ள திரவ ஆக்சிஜனை அனுப்பி வைக்கவும் மின்சாரம் தேவை. எனவே 2 மெகாவாட் மின்சாரத்தை தொடர்ந்து ஆலைக்கு வழங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
நாட்டின் இக்கட்டான நிலையில் மக்களுக்கு உதவி செய்ய எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். உச்சநீதிமன்றம் எந்த நேரத்தில் உத்தரவிட்டாலும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க தயா ராக இருக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment