கோவிட்- 19 நோய் தாக்குதல் ஏற்பட்டதும், அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரல் தான். மருத்துவர்கள், நுரையீரலை சி.டி., ஸ்கேன் அல்லது எம்.ஆர்.அய்., ஸ்கேன் செய்வது, இந்த பாதிப்பை அறியத்தான்.அண்மையில் நுரையீரல் பாதிப்பை அறிய வந்திருக்கும் புதிய தொழில்நுட்பம், இந்த இரு ஸ்கேன் முறைகளிலும் தெரிய வராத பாதிப்பையும் தெளிவாகக் காட்டுகிறது.
'ஹைப்பர் போலாரைஸ்டு' ஜெனான் என்ற இந்த எம்.ஆர்.அய்., புதிய ஸ்கேனிங் முறை, நாள்பட்ட கோவிட் தாக்குதலால், நுரையீரலிலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு ஆக்சிஜன் அனுப்பப்படும் இயக்கத்தை துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறது.
இதனால், நாள்பட்ட கோவிட் நோயாளிகளின் நுரையீரலில் ஏற்படும் சீரழிவை மருத்துவர்களால் துல்லியமாக மதிப்பிட்டு, சிகிச்சை தர முடியும். இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு மற்றும் ஷெபீல்டு ஆகிய இரு மருத்துவ பல்கலைக்கழகங்களின் கூட்டு முயற்சியில் இந்த ஆய்வு நடக்கிறது. விரைவில் புதிய எம்.ஆர்.அய்., கருவி மூலம் நுரையீரலின் செயல்பாடுகள், கோவிடின் தாக்குதல் ஆகியவை பற்றி மேலும் தகவல்கள் தெரிய வரும் என, மருத்துவர்கள் காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment