உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 17 தமிழ் நாட்டில் மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணை யங்களில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பணியிடங்களை 4 மாதத் திற்குள் நிரப்ப வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் காலியாக உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கும், திருநெல்வேலி, சேலம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் மாவட்டங் கள் தவிர, பிற மாவட்டங் களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் தலை வர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றை நிரப்பக் கோரி சென்னை யைச் சேர்ந்த வழக்குரை ஞர் அலெக்ஸ் பென்சிகர் சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்குத் தொடர்ந் தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங் கிய அமர்வில் நேற்று (16.7.2021) மீண்டும் விசா ரணைக்கு வந்தது.
அப்போது, மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவராக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுப்பையாவை நியமித்துள்ளதாகத் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் முத்துக்குமார் தெரிவித் தார்.
இதையடுத்து, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன் றங்களில் உள்ள தலைவர், உறுப்பினர் பணியிடங் கள் நிரப்புவதற்கான தேர் வுக் குழுவை ஒரு வாரத் தில் நியமிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட் டனர்.
மேலும், இந்தத் தேர் வுக் குழு, காலிப் பணியி டங்களுக்கு விண்ணப்பங் கள் வரவேற்று விளம்பரம் வெளியிட்டு, 4 மாதத்திற் குள் காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
No comments:
Post a Comment