மறைவுற்ற தோழர்களின் குடும்பத்தினருக்கு கழகப் பொறுப்பாளர்கள் ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

மறைவுற்ற தோழர்களின் குடும்பத்தினருக்கு கழகப் பொறுப்பாளர்கள் ஆறுதல்

சென்னை மண்டலம் ஆவடி மாவட்டத்தில் மறைவுற்ற பொறுப்பாளர்களின் குடும்பத்தினருக்கு ஆவடி மாவட்டக் கழகம் சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் ஆறுதல் கூறினர்ஆவடி மாவட்ட மேனாள் செயலாளர் இல. குப்புராசு (21-4-2021), மேனாள் தலைவர் கந்தசாமி (10-5-2021) பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா. இராமதுரை (22-5-2021) ஆகியோர் காலமானதைத் தொடர்ந்து, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் .இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், நகரச் செயலாளர் கோ.முருகன் ஆகியோர் மூவரின் வீடுகளுக்கும் நேரில் சென்று அவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

No comments:

Post a Comment